திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

72 வயதில் சும்மா கிடைக்குமா சூப்பர் ஸ்டார் பட்டம்?. ஏழு வருடத்தில் 70 படங்கள் நடித்த சாதனை

Title Superstar: தன் ஸ்டைலாலும், நடிப்பாலும் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, புகழின் உச்சம் தோட்ட பிரபலம் தான் சூப்பர் ஸ்டார் . இந்நிலையில் 72 வயதாகும் இவரை சூப்பர் ஸ்டார் என கொண்டாடுவது ஏன் என்பதை குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினி. ஆரம்பத்தில் தன் தோற்றத்திற்கு, வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்த இவர் அதன்பின் தன்னுள் இருக்கும் ஸ்டைலை வெளிக்காட்டி மேற்கொண்ட ஹீரோ கதாபாத்திரம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது.

Also Read: அதிரடியாக சென்சார் போர்டில் இருந்து வெளிவந்த ஜெயிலர் விமர்சனம்.. ரஜினி-நெல்சன் தல தப்புமா?

அவ்வாறு தொடர்ந்து நடிப்பை மேற்கொண்ட இவர் திரை உலகில் முதல் ஏழு வருடத்தில் 70 படங்களில் நடித்து சாதனை படைத்தார். தற்பொழுது வரும் இளம் நடிகர்கள் ஒரு வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடிப்பதையே பெரிதாக நினைக்கின்றனர்.

மேலும் அவ்விரண்டு படங்களும் வெற்றி அடைவது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பாதியிலேயே முயற்சியை கைவிட்டவர்களும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக 1978 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 21 படங்களில் நடித்திருக்கிறார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மொக்கையான வரிகளில் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தமிழில் அட்லீ-அனிருத் கூட்டணி ஜெயிக்குமா?

அவ்வாறு இவர் நடிப்பில் மூன்று முடிச்சு, 16 வயதினிலே, முள்ளும் மலரும், இறைவன் கொடுத்த வரம், தப்பு தாளங்கள், தாய் மீது சத்தியம் போன்ற படங்களில் இவர் ஏற்ற கதாபாத்திரம் மக்களிடையே பெரிதாக பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து முன்னணி கதாநாயகனாக இவர் மேற்கொண்ட படிக்காதவன், வேலைக்காரன், மிஸ்டர் பரத், பில்லா போன்ற படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்தது. இப்பொழுது 72 வயது காணும் இவர் இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாய் களம் இறங்கி வருகிறார் என்பது சவாலாக பார்க்கப்படுகிறது. இத்தகைய அனுபவம் கொண்ட இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுப்பதில் தவறு ஏதும் இல்லை என பலரால் பேசப்பட்டு வருகிறார்.

Also Read: மக்களை காக்கும் மாவீரன் சும்மா டம்மி வசனமா.? நிஜத்தில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக நடக்கும் போராட்டம்

Trending News