சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கருணாஸ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் கதை இரண்டு காலக் கட்டத்தில் நடப்பதால் ரசிகர்களைக் குழப்பாமல் இயக்குனர் சிவா தேர்தல் திரைக்கதையும், மதன் கார்க்கியுடன் சேர்ந்து அக்காலக் கட்டத்திற்கு ஏற்றாற்போல் புதிய தமிழ்ச் சொற்களை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக பீரியட் பிலிம் வகை எடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. அதற்கு பெரியளவில் பட்ஜெட் தேவைப்படும் ஆனால் இப்படிப்பட்ட படத்தை தமிழ் சினிமாவில் சூர்யா எடுக்க நினைத்து, அதற்காக 2 ஆண்டு காலத்தை செலவிட்டு தரமான படமாக எடுத்துக் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
படம் பார்த்தவர்களுக்கு தலைவலி, காதுவலி? தயாரிப்பாளரின் தரமான சம்பவம்
இப்படம் பார்த்த பெரும்பாலானோர் கூறிய விமர்சனம் ’இப்படத்தில் நடிகர்கள் பேசும் வசனத்தின் போது தியேட்டரில் சத்தம் அதிகமாக இருக்கிறது. இசை சரியாக விழாதபடி இரைச்சல் அதிகமாக இருக்கிறது. தலைவலி உண்டாக்குகிறது’ என்று கூறியிருந்தனர். ரசிகர்களின் விமர்சனத்தைக் காதுகொடுத்துக் கேட்ட கங்குவா படக்குழு இதுகுறித்துப் பரிசீலனை செய்தததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஞானவேல் ராஜா பேசியதாவது; ’’கங்குவா படம் பார்த்தவர்கள் சத்தம் அதிகமாக இருப்பதாக கூறியதை அடுத்து, திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள், ஸ்கிரீன்களில் எல்லாம், 2 பாயிண்டுகள் சவுண்ட் வாலியம்மை குறைக்கச் சொல்லியிருக்கிறோம்‘ ’’என்று தெரிவித்துள்ளார்.எனவே இன்று முதல் தியேட்டர்களில் சவுண்ட் 2 பாயிண்ட் குறைத்து ஒலிக்கப்படும் என தெரிகிறது.
ஆனால், ஒரு பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக எடுத்து, உலகம் முழுவதும் 11,500 தியேட்டர்களில் முதல் நாளில் ரிலீஸ் செய்யும் முன்பே சவுண்ட் மிக்சிங், வாலியம் இதெல்லாம் செக் செய்யாமல் எப்படி, இதை அவசர கதியில் ரிலீஸ் செய்தார்கள்? என சினிமார் விமர்சகர்களும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் விமர்சனத்தை ஏற்று உடனடியாக அதை சரி செய்த தயாரிப்பாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.