வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பொங்கல் ரேஸில் வென்றது யார்? கேப்டன் மில்லர், அயலானின் 2ம் நாள் கலெக்சன் ரிப்போர்ட் 

Captain Miller, ayalaan 2nd day box-office collection: நேற்று முன்தினம் பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அயலான் படமும், தனுஷின் கேப்டன் மில்லர் படமும் ரிலீஸ் ஆனது. இந்த படங்களின் இரண்டாம் நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தனுசுக்கே போட்டியாக சிவகார்த்திகேயன், இந்த பொங்கல் பண்டிகையில் நேருக்கு நேராக மோதியதால் ஒட்டுமொத்த திரையுலகமே பரபரப்பாகவே இருக்கிறது.

இந்தப் பொங்கல் ரேஸில் யார் வெல்வார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. குட்டிஸ் முதல் 60’ஸ் வரை ஏலியன் கான்செப்டில் உருவாகி இருக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை தான் பார்க்க விரும்புவார்கள், அந்தப் படத்திற்கு தான் வசூல் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் இணையத்தில் கிளப்பி விடுகின்றனர்.

ஆனால் இளசுகளுக்கு சண்டைக் காட்சிகள் அதிகம் நிறைந்த ஆக்சன் படமான கேப்டன் மில்லர் படம் தான் ரொம்பவே பிடித்திருக்கிறது. இதனால் முதல் மற்றும் இரண்டு நாட்களின் வசூல் விபரத்தை பார்த்தால் அயலானை பின்னுக்கு தள்ளி, கேப்டன் மில்லர் தான் ரேஸில் முன்னிலை வகிக்கிறது. 

Also Read: Captain Miller Movie Review- ஆதிக்க அராஜகத்தை எதிர்த்து நடக்கும் போராட்டம்.. கேப்டன் மில்லர் எப்படி இருக்கு.? விமர்சனம்

கேப்டன் மில்லர், அயலான் படத்தின் 2வது நாள் வசூல் 

முதல் நாளில் அயலான் படத்திற்கு 10 முதல் 13 கோடி வசூல் கிடைத்ததை, தொடர்ந்து இரண்டாவது நாளில் 16.86 கோடியை வசூலித்துள்ளது. அதுமட்டுமல்ல அயலானுக்கு தமிழகத்தில் மட்டும் இரண்டாவது நாளில் 7.5 கோடி வசூல் கிடைத்திருக்கிறது. 

அதேபோல் கேப்டன் மில்லர் படம் முதல் நாளில் 14 முதல் 17 கோடியை வசூல் செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளில் உலக அளவில் 26.19 கோடியை வசூலித்துள்ளது. அதோடு இரண்டாவது நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் கேப்டன் மில்லர் படம் 13.5 கோடியை பாக்ஸ் ஆபிஸில் நிரப்பி இருக்கிறது.

இந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளி தனுஷ் தான் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த ரெண்டு படங்களின் வசூல் இதோடு நின்று விடாது, இன்னும் அடுத்தடுத்த நாட்களில் பொங்கல் ஹாலிடேஸில் பன்மடங்காக உயரப் போகிறது.

Also Read: அயலான் vs கேப்டன் மில்லர்: முதல் நாள் வசூலில் ஜெயிச்ச சிங்கம் யாருனு தெரியுமா?

Trending News