வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

குடுமி, தாடி, கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் தனுஷ்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் கேப்டன் மில்லர் போஸ்டர்

Captain Miller: தனுஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் தான் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இப்படம் பல மாதங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே தனுஷ் தாடி, நீண்ட தலைமுடி என தன்னுடைய தோற்றத்தை மொத்தமாக மாற்றி இருந்தார்.

காடுகள் உட்பட பல்வேறு பகுதிகளில் ஷூட்டிங் நடத்தப்பட்ட வந்த இப்படத்திற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. ஆனாலும் பட குழு படத்தை வெற்றிகரமாக வெளியிட வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயல்பட்டு வந்தனர். அதன்படி அவர்கள் தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Also read: சரக்கு தீர்ந்த நிலையில் நிராயுதபாணியாக நிற்கும் இயக்குனர்.. ஆள விடு என எஸ்கேப் ஆன தனுஷ்

அந்த வகையில் இந்த போஸ்டரை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள தனுஷ் மரியாதை என்பது சுதந்திரம் என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படம் ஏற்கனவே பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

அதில் தனுஷ் கையில் துப்பாக்கியுடன் ரத்த களரியாக நிற்கிறார். அவரை சுற்றி போரில் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தவர்களின் உடல்களும் ஆயிரக்கணக்கில் கிடைக்கிறது. இதை பார்க்கும் போதே படம் எந்த அளவுக்கு இருக்கும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதிலும் ரியல் கேப்டன் மில்லரின் வரலாற்றை அறிந்தவர்கள் இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.

Also read: மாமன்னன் படம் எப்படி இருக்கு.? முதல் விமர்சனத்தை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய தனுஷ்

அந்த வகையில் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் சில வேலைகள் இருப்பதால் வருட கடைசியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்படி அந்த போஸ்டரில் 2023 இல் படம் வெளியாகும் என்று போடப்பட்டிருக்கிறது.

இதனால் குஷியான ரசிகர்கள் இப்போதே படத்தை கொண்டாடுவதற்கு தயாராகி விட்டனர். இந்த வருட ஆரம்பத்தில் தனுஷின் வாத்தி படம் வந்த நிலையில் வருட கடைசியிலும் அவர் படம் வெளிவர இருப்பது ரசிகர்களுக்கான டபுள் ட்ரீட்டாக இருக்கிறது. அந்த வகையில் இந்த கேப்டன் மில்லரின் கில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இணையத்தை ஆக்கிரமிக்கும் கேப்டன் மில்லர் போஸ்டர்

dhanush-captain-miller-poster
dhanush-captain-miller-poster

Trending News