வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரத்தம் தெறிக்க கொலைவெறியோடு வந்த கில்லர்.. ரிலீஸ் தேதியோடு வெளியான கேப்டன் மில்லர் டீசர்

Captain Miller Teaser: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் டீசர் இன்று அதிரி புதிரியாக வெளியாகி உள்ளது. தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01க்கு வெளியிடப்பட்ட இந்த டீசர் இப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

பீரியட் கால கதை களத்தைக் கொண்ட இப்படம் ஆக்சன் அட்வெஞ்சர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் தற்போது வெளியான டீசரும் ரத்தம் தெறிக்க கொலை வெறியோடு இருக்கிறது.

Also read: எக்ஸ் மாமனாருக்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ்.. உங்க ஆட்டத்துல இது புது ரகமாக இருக்கு மில்லர்

அந்த வகையில் டீசரின் ஆரம்பமே துப்பாக்கி சத்தத்துடன் தான் தொடங்குகிறது. அதை தொடர்ந்து போராளிகளுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடக்கும் யுத்தம் ஒவ்வொன்றும் ஆக்ரோசத்தின் உச்சமாக இருக்கிறது. அதற்கு பின்னணி இசையும் பக்கபலமாக உள்ளது.

அதிலும் தனுஷ் கையில் ஆயுதத்துடன் ரத்த வெறியோடு தாக்கும் அந்த காட்சியும், ரக ரகமான துப்பாக்கிகளை கொண்டு நடக்கும் தாக்குதல்களும் பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் தனுஷின் நடிப்பிற்கு இப்படம் சரியான தீனியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: வெற்றிமாறன் கேட்டும் டைட்டிலுக்கு முடியாது என கூறிய ஹரி.. தனுஷ் படத்திற்கு வந்த சிக்கல்

அந்த அளவுக்கு டீசர் ரசிகர்களை உற்சாகப்பட வைத்திருக்கிறாது. அதிலும் ரிலீஸ் தேதியோடு வீடியோவை பட குழு வெளியிட்டு இருப்பது சிறப்பு. அந்த வகையில் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி உலக அளவில் கேப்டன் மில்லர் திரையரங்குகளை அலங்கரிக்க வருகிறார். ஆக மொத்தம் ரியல் கேப்டன் மில்லரை கண்முன் காட்டியுள்ள தனுஷுக்கு எங்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Trending News