கேப்டன் மில்லர் படத்துக்கு வந்த சோதனை.. பல கோடி நஷ்டத்தில் தயாரிப்பாளர்

தனுஷ் நடிப்பில் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாத்தி படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு நடந்துள்ளது.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தை இப்படம் கொண்டுள்ளதாம். இப்படத்தின் சண்டை காட்சிகள் தென்காசியில் உள்ள வனப்பகுதியில் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வந்த கேப்டன் மில்லர் ஷூட்டிங் தற்போது தடைப்பட்டுள்ளது.

Also Read :வெறித்தனமாக வெளியான வாத்தி பட போஸ்டர்.. தளபதியுடன் மல்லுக்கு நிற்கும் தனுஷ்

அதாவது கேரளாவில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதிகளில் ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு பிரம்மாண்டமாக செட் போட்டு படப்பிடிப்பு நடத்த எண்ணிய நிலையில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பட குழுவினர் தற்போது சூட்டிங் தள்ளி போட திட்டமிட்டுள்ளனர்.

அதாவது கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அங்கு மழை பொலிவு அதிகமாக இருக்கும் என கூறப்படுவதால் 90 நாட்கள் சூட்டிங் தள்ளி வைத்துள்ளனர். தனுஷின் கால்ஷீட் வீணாவதால் அவர் தரப்பிலிருந்து தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

Also Read :காலை வாரிவிட்ட பிரின்ஸ் படம்.. உச்சகட்ட பயத்தில் இருக்கும் விஜய், தனுஷ்

மேலும் கேப்டன் மில்லர் படத்தில் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உபயோகப்படவுள்ளது. இதனால் தற்போது அந்த பொருட்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாம். மேலும் சூட்டிங்காக தயார் பண்ணிய அனைத்துமே தற்போது வீணாகியுள்ளது.

இதனால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஆகியுள்ளதாம். ஆனால் படத்தின் ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமம் ஆகியவை தற்போதே 120 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. ஆனால் மீண்டும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Also Read :ஜெட் போல் ஏறிய மார்க்கெட் இறங்கும் பரிதாபம்.. தனுஷ் பட நடிகை தேவை இல்லாமல் செய்யும் வம்பு