திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சின்ன பின்னமாக உடைக்கப்பட்ட விஜயகாந்தின் சொத்து.. மனம் உருக கேப்டன் பேசிய வார்த்தைகள்

Vijayakanth: புரட்சி கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என போற்றப்பட்ட விஜயகாந்த் தன் கடைசி மூச்சை நிறுத்தி இருக்கிறார். இவர் உயிரிழந்த தருணத்தில் நிறைய நினைவுகளை பற்றி பேசி வருகிறார்கள். அதில் ஒன்றுதான் அவருடைய கல்யாண மண்டபத்தை இடித்தது.

நடிகர் விஜயகாந்த் சினிமாவுக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லாத செல்வந்தர் வீட்டில் பிறந்தவர் தான். பல சொத்துக்களுக்கு அதிபதியான அவர், சினிமா ஆசைக்காக மட்டும்தான் வந்து இங்கு ஜெயித்துக் காட்டினார். இதனால் அவருக்கு எப்போதுமே பணம் ஒரு பெரிய விஷயமாக தெரிந்தது இல்லை. உதவி என்று வருபவர்களை ஆதரித்து உதவி செய்வதில் கலியுக கர்ணனாக வாழ்ந்து வந்தார்.

சினிமா கலைஞர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கும் நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். ஏழை எளியவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டிருக்கிறார். இதுதான் விஜயகாந்த் மக்களோடு இணைந்து பயணித்ததற்கு முக்கிய காரணம். அவர் அரசியலில் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், தமிழக அரசியலில் ஒரு மாபெரும் மாற்று சக்தியாக இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read: டிசம்பரில் மக்களை விட்டுப் போன 3 தலைவர்கள்.. தமிழ்நாட்டையே அழ வைத்த மன்னவர்கள்

விஜயகாந்தின் அரசியல் பாதையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது தான் அவருடைய ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தின் இடிப்பு சம்பவம். கோயம்பேட்டில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் அவருடைய அப்பா அம்மா பெயரில் கல்யாண மண்டபம் கட்டி இருந்தார் விஜயகாந்த். அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற சமயத்தில், ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி நடத்தப்பட்டது.

ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம்

மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அந்தப் பகுதியில் பாலம் கட்டுவதற்காக ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் இடம் வேண்டுமென்று விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். விஜயகாந்த் கோர்ட்டில் கேஸ் போட்டு பார்த்தார், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இடம் மண்டபத்தை இடிக்காமல் பாலத்தை கட்டுவதற்கான பிளான் கூட கொடுத்தார். ஆனால் திட்டமிட்டபடி அந்த மண்டபத்தை இடித்து அதில் இருந்து 56 சென்ட் இடம் பாலம் கட்டுவதற்காக எடுக்கப்பட்டது.

விஜயகாந்த் மனம் உருகி, இது நான் வேர்வை சிந்தி சம்பாதித்தது, மற்றவர்கள் மாதிரி ஊரை அடித்து எல்லாம் சம்பாதிக்கவில்லை. கடன் பட்டு, கஷ்டப்பட்டு கட்டி முடித்த மண்டபம் கண் முன்னாடி உறங்கும்போது சுருக்கென வலிக்குது என சொல்லி இருந்தார். அவர் உயிராக நினைத்த அந்த மண்டபத்தின் இடத்தில் தான் இப்போது விஜயகாந்தின் கட்சி ஆபீஸ் கட்டப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் தான் கேப்டன் மீளா துயில் கொள்ளப் போகிறார்.

Also Read: ஜெயலலிதா, விஜயகாந்த் நிலைமை உங்களுக்கு வேண்டாம்.. அஜித்துக்காக பிரேமம் இயக்குனர் போட்ட அதிர்ச்சி பதிவு

Trending News