Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் பெரிய ரிஸ்க் எடுத்து நடித்த படம் என்றால் அது ஊமை விழிகள். முழுக்க முழுக்க திரைப்பட கல்லூரியை படித்துக் கொண்டிருந்த மாணவர்களை நம்பி விஜயகாந்த் அந்த படத்தை நடித்துக் கொடுத்தார்.
விஜயகாந்தின் நம்பிக்கையை காப்பாற்றும் அளவுக்கு அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. விஜயகாந்த் இறந்த சமயத்தில் ஊமை விழிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை உடன் எடுக்கப் போவதாக அந்த படத்தின் இயக்குனர் ஆபாவாணன் தெரிவித்திருந்தார்.
விஜயகாந்த் இறந்த கிட்டத்தட்ட ஒரு வருடமாக போகிறது. இதுவரை அந்த படம் சம்பந்தப்பட்ட எந்த அப்டேட்டுகளும் வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணமாக கோட் படத்தை சொல்லி இருக்கிறார்கள் வலைப்பேச்சு சேனலை சேர்ந்தவர்கள்.
ஊமை விழிகள் 2 படம் என்னாச்சு
விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் வந்த AI டெக்னாலஜி விஜயகாந்த் பெரிய அளவில் மக்களிடம் சென்றடையவில்லை. எப்படியோ எதிர்பார்த்து அது எப்படியோ முடிந்துவிட்டது. ஒரு காட்சிக்கு இப்படி என்றால் படம் முழுக்க AI டெக்னாலஜியில் விஜயகாந்த் தோற்றம் வருவது எந்த அளவுக்கு வெற்றியடையும் என அந்த இயக்குனருக்கு சந்தேகம் வந்துவிட்டது போல.
அதனால் தற்போதைக்கு அவர் வேறொரு படத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாராம். விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தில் மட்டும் ரமணா பட தோற்றத்தில் AI டெக்னாலஜியின் விஜயகாந்தை கொண்டு வர இருக்கிறார்களாம். கோட் பட அளவுக்கு மோசமாக இல்லாமல் இதில் விஜயகாந்த் வரும் காட்சிகள் அப்படியே தத்ரூபமாக இருப்பதாக வலைப்பேச்சு சேனலில் சொல்லப்பட்டு இருக்கிறது.