வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

நீ கருப்பா இருக்க.. பழிவாங்கவே வேறொரு கல்யாணம் செஞ்சுக்கிட்ட கேப்டனின் காதலி

Captain Vijayakanth’s girlfriend wanted to take revenge: கேப்டன் விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அவருக்கு வேறொரு காதலும் இருந்திருக்கிறது. ஆனால் அவர்களது காதல், கல்யாணத்தில் முடியாமல் போய்விட்டது. அதுவும் அந்த காதலி கேப்டனை பழிவாங்க வேண்டும் என்று வேறொருவரை சபதம் போட்டு திருமணம் செய்திருக்கிறார்.

80களில் கேப்டன் உடன் நெருங்கி நடித்த நடிகை தான் நடிகை ராதிகா. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்களான நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம், சிறைப்பறவை, வீரபாண்டியன், உழவன் மகன், தெற்கத்திக் கள்ளன் போன்ற படங்களில், இவர்களது நெருக்கத்தின் மூலமே தங்களது காதலை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி சேர வேண்டும் என்று தான் ரசிகர்களும் விரும்பினார்கள். ஆனால் விஜயகாந்த்- ராதிகா காதலுக்கு கேப்டனின் நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் தான் வினையாய் இருந்திருக்கிறார். அவர்தான் கேப்டனிடம் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என உறுதியாக சொல்லிவிட்டார்.

Also Read: 5 ஹீரோக்களுக்கு மறக்க முடியாத ஹிட் கொடுத்த ஏஆர் முருகதாஸ்.. டம்மி இல்லன்னு நிரூபிச்ச கேப்டனின் படம்

கேப்டன் விஜயகாந்த்தை பழிவாங்க துடித்த காதலி

அதுவரை கேப்டன் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் பிளானில் இருந்தார். ஆனால் நண்பர் சொன்னதும் ராதிகாவை தூக்கி எறிந்தார். ஆனா ராதிகா விஜயகாந்தை விடுறதா இல்ல, அவரிடம் நிறையவே பேசி புரிய வைக்க பார்த்திருக்கிறார். இதுக்கெல்லாம் கேப்டன் எந்த ரெஸ்பான்சும் காட்டு வில்லை. இதனால் கடுப்பான ராதிகா விஜயகாந்தின் மீது கோபப்பட்டு போய்விட்டார்.

அதுமட்டுமல்ல விஜயகாந்தை பழிவாங்க வேண்டும் என்றே, ‘கருப்பா இருக்கிற நீ என்ன வேண்டாம்னு சொல்லிட்ட, நான் உன்ன விட சிகப்பா ஒருத்தர கல்யாணம் பண்ணி காட்டுறேன்’ என்று சொல்லி வெள்ளக்கார துரை போல் இருக்கும் ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது. ஆனால் ஒரு சில வருடத்திலேயே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை ராதிகா தான் வளர்த்து வந்தார். சமீபத்தில் தான் அந்தப் பெண்ணுக்கு திருமணமும் செய்து வைத்தனர். ராதிகா இரண்டாவது திருமணமாகத்தான் நடிகர் சரத்குமாரை கல்யாணம் செய்து கொண்டார்.

Also Read: விஜயகாந்த், ராதிகா இணைந்து கலக்கிய 6 படங்கள்.. கிட்டத்தட்ட 13 படங்களில் கைகோர்த்த ஜோடி

- Advertisement -

Trending News