வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஐயோ இந்த பொண்ணு கூட எல்லாம் நடிக்கவே முடியாது.. ஊர்வசியை பார்த்து அதிர்ந்து போன விஜயகாந்த்

நடிகை ஊர்வசி பல ஆண்டு காலமாக சினிமாவில் உள்ளார். இவர் தேசிய விருது, பல மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள் பெற்றிருக்கிறார். அதேபோல் டப்பிங் குரல் தருபவராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் இயங்குகிறார். இவரது நடிப்பை பார்த்து கமலஹாசன் கூட வெகுவாக பாராட்டியுள்ளார்.

இவர் எப்போதுமே, பெண்களை கண்ணியமாக காட்டுங்கள் என்று பெண்களுக்காக குரல் கொடுப்பவராகவும் உள்ளார். 1977ல் விதரொன்ன மொட்டுக்கள் என்ற திரைப்படத்தில் 8 வயதில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஊர்வசி. அதேபடத்தில் அவரது சகோதரி கல்பனாவும் அறிமுகமானார். இவர் மளையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை 1998 ல் திருமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், 2013-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

ஊர்வசியை பார்த்து மிரண்டுபோன கேப்டன்

சமீப காலமாக பல நல்ல படைப்புகளை இவர் கொடுத்து வருகிறார். இப்படி இருக்க, இவர் கொடுத்த ஒரு பேட்டியில் கேப்டன் விஜயகாந்த் பற்றி சொன்ன தகவல்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது. ஒரு முறை ஹீரோயின் ஊர்வசி என்று கேப்டனிடம் சொல்ல, அவர், “ஐயோ அந்த பொண்ணா.. நடிக்கவே முடியாது அவங்க கூட” என்று கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியாகி ஏன் என்று கேட்டுள்ளார்கள். அதற்க்கு, “அந்த பொண்ண வார்த்தைக்கு வார்த்தை நான் தங்கச்சி என்று கூப்பிடுகிறேன்.. என்னால் எப்படி ஜோடி போட்டு நடிக்க முடியும். ஆனால் அதெல்லாம் மீறி இயக்குனர்கள் கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்துள்ளார்கள்.

“அப்போது கூட, என் கண்ணை அவர் பார்க்கமாட்டார். காதல் காட்சி வரும்போது, என் கண்ணை உற்று பார்க்கமாட்டார். நெருக்கமான காட்சிகளில் நடிக்க நோ சொல்லிவிடுவார்” என்று கூறியுள்ளார். இது ரசிகர்களை வெகுவாக தற்போது ஈர்த்துள்ளது.

Trending News