ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஏ ஆர் ரகுமான் மியூசிக் உடன் வெளியாகும் கார்.. இந்த கார் விலை, வசதி தெரிஞ்சா அசந்துபோவீங்க

இந்தியர்களின் கனவாக இருந்த ஆஸ்கர் விருதை சில ஆண்டுகளுக்கு முன் வென்று தன் வசமாக்கி எல்லாப் புகழும்   இறைவனுக்கே என்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர்  நாயகன் என்று அழைக்கப்படும் அவர் தக்லைஃப், சூர்யா 45, இந்திப் படங்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், பிரபல நிறுவனத்தில் புதிய காருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள மியூசிக் வைக்கப்பப்பட்டுள்ளது பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்திராவின் எலக்ட்ரிக் வகை கார்

இந்திய மோட்டார் வாகன சந்தையில் முன்னணியில் உள்ளது மஹிந்திரா  நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு மாடலும் பயனர்களின் வரவேற்பை பெற்று லீடிங்கில் உள்ளது. அனைத்து மாடல்களுக்கும் பிரத்யேகமான தயாரிப்பு, வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் அதன் வடிவமைப்பு ஆகியவை உள்ளதால் சந்தையில் மக்களின் சாய்ஸ் ஆக உள்ளது. பெட்ரோல், டீசல் கார்களுக்கு இணையாக வெளி நாடுகளைப் போல் இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார்கள் பிரபலமாகி வரும் நிலையில், மஹிந்திரா நிறுவனம் அதில் ஈடுபட்டு பிரெத்யேக மாடல் கார்களை உற்பத்தி செய்து  வருகிறது.

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம்  பிஇ 05 என்ற எலக்ட்ரிக் வகை காரை விரைவில் சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தக் கார் எஸ்யுவி வகைக் காராக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இந்தக் காரில் உள்ள ஒரு முக்கிய அம்சமாக ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய சத்தங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையே தனித்துவம் என்பதால் காரில் இதுவரை கேட்டுப் பழகிய சத்தத்தைக் காட்டிலும் இனி இக்காரில் இருந்து கேட்கும் சத்தம் அதிக வித்தியாசப்படும் என  தெரிகிறது.

அதன்படி, பிஇஎப் பிராண்ட் மூலம் பிஇ 05 எலக்ட்ரிக் எஸ்யூவி வகை காரான இது இந்திய மார்க்கெட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது மற்ற கார்களில் இருந்து வேறுபடும் படியாக ஸ்போர்ட் & கூபே ஸ்டைல் எஸ்யூவி வகை கார் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அட்டகாசமான தோற்றத்தில் பயனர்களைக் கவரும் விதத்தில் உள்ளது. இந்தக் கார் எப்போது விற்பனை வரும் என கேள்வி எழுந்து வரும் நிலையில் அடுத்தாண்டு  இறுதியில் இது விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தக் காரின் நீளம் 4 மீட்டருக்கும் அதிகம் மற்றும் எஸ்யூவி வகை காராக இருப்பதாலும், பிளாஷ் டோர் ஹேண்டில்கள் இதில் அமைக்கப்படலாம் என்பதாலும், இந்த வடிவமைப்பு  லக்ஸூரியான பொலிவைக் கொடுப்பதனாலும், இக்கார் விலையும்  அதிகமான இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் தனது ஒவ்வொரு மாடல் கார்களையும் பார்த்து பார்த்து உருவாகி, இந்திய சாலைகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப உருவாக்கி வருவதால் இது நிச்சயம் சந்தையில் ஹிட்டடிக்கும் மாடலாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் சவுண்ட் வடிவமைப்பு மற்றும் காரின் சிறம்பம்சங்கள்!

மேலும், ஒவ்வொரு காருக்கும் என தனி சவுண்ட் சிஸ்டம் இருக்கும். அது எஸ்யுவி கார் எனும் பட்சத்தில் அதன் சவுண்ட் இன்னும் வித்தியாசப்படும். அந்த வகையில், இந்தக் காரின் இண்டிகேட்டர், ஹாரன், ஸ்பீக்கரில் ஒலிக்கும் சத்தம், முன்னெச்சரிக்கை குறிப்பு, இன்பொடெயின்மெண்ட் பொத்தான் அழுத்தும் போது எழும் சத்தம் இதெல்லாம் பயனர்களை கவரும். எனவே,  பிஇ 05 என்ற காரின் சவுண்ட் சிஸ்டத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை வடிவமைத்து கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இக்காரில் டால்பி அட்மாஸ் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்படும் நிலையில்,  இதில் ரஹ்மானின் இசை வடிவமைப்பும் மேலும் இக்காருக்கு கச்சிதமாகவும் பொருத்தமானதாகவும் அமையும் என தெரிகிறது.  இதில், ஸ்டீரில் வீல் ஸ்பெசலாக இருக்கும். இக்காரில் 5 பேர் உட்கார்ந்து பயணிக்க முடியும் எனவும், இக்காருக்கு 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.  இந்த எலக்ட்ரிக் காரை ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் வகையில்  தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே சந்தையில், டாடா, ஹியூண்டாய், ஓலா, டொயோட்டா  உள்ளிட்ட கார்கள் வாடிக்கையாளர்களைக்  கவர பல்வேறு அம்சங்கள், பிரத்யேக வசதிகளைக் கொண்ட காரினை வடிவமைத்து சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில், மஹிந்தியா நிறுவனம் மார்கெட்டில் நிலவும் போட்டிக்கு ஏற்ப தயாராகி, கூபே ஸ்டைல் எஸ்யூவி காராக இதை உருவாக்கியுள்ளதுடன், இந்தக் காரின் ஸ்டேரிங்கில் ரீஜென் பீரேக்கிற்கான பெடலும் பொருத்தப்பட்டுள்ளது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இந்தக் கார் 20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையில் விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது. 

எப்போது இந்தக் கார் விற்பனைக்கு வரும்?

அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் பாரத் மொபிலிட்டு குளோபல் கண்காட்சியில் மஹிந்திராவின்  பிஇ 05 எலக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களை, மோட்டார் வாகன பிரியர்களையும் கவரும் என கூறப்படுகிறது. குறிப்பாக இளைஞர்களைத் தன் இசையில் கட்டிப் போடும் ஏ.ஆர்.ரஹ்மானின்  இசை வடிவமைப்பு இந்த கார் முழுவதும் சவுண்ட் சிஸ்டமாக இருக்கப் போவதால், டால்பி அட்மாஸ் சிஸ்டத்தில் காரில் செல்லுவோருக்கு இனிமையான மற்றும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என தெரிகிறது.

Trending News