திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மணிரத்னம் மீது வழக்கு.. பொன்னியின் செல்வன் 2 ரிலீஸாகும் நேரத்தில் சூழ்ச்சி

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தனர்.

மேலும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் இரண்டாம் பாகத்தில் மணிரத்தினம் சில மாறுதல்கள் செய்துள்ளாராம். மேலும் இந்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வர இருக்கிறது. இந்த சூழலில் மணிரத்தினம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Also Read : மணிரத்னத்திற்காக விட்டுக் கொடுத்த ரஜினி.. பரபரப்பை கிளப்பிய ஜெயிலர் அப்டேட்

அதாவது சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் பொன்னியின் செல்வன் படத்தின் கதையை மணிரத்தினம் திரித்துக் கூறியிருக்கிறார் என்ற வழக்கு போட்டு உள்ளார். இந்த வழக்கு கூடிய விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் படம் வெளியாகி இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு இப்போது வழக்கு தொடரப்படுவதற்கு கேள்வி என்ன இன்று எழுப்பப்பட்டுள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூலை முறியடிக்க இவ்வாறு சிலர் சூழ்ச்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : மணிரத்னம் அறிமுகப்படுத்திய ரத்தினக்கல்.. இளசுகளை கிறங்கடித்த அரவிந்த் சாமியின் 6 வெற்றி படங்கள்

இதுமட்டுமின்றி ஒரு நாவலை அப்படியே படமாக எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் சினிமாவுக்காக படத்தில் சுவாரஸ்யம் கூட்ட சில விஷயங்களை சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த படம் புரியும்படி மணிரத்தினம் எடுத்திருந்தார்.

இதுவே அவருக்கு மிகப்பெரிய வெற்றி. இப்படி பொன்னியின் செல்வன் நாவல் படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரின் எதிர்பார்ப்பையும் மணிரத்தினம் பூர்த்தி செய்த நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு களங்கம் விளைப்பிக்கும் வருடமாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Also Read : மணிரத்னம் இயக்கத்தில் தோல்வியடைந்த 5 படங்கள்.. யானைக்கும் அடி சறுக்கும் என நிரூபித்த படம்

Trending News