வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மகனுக்காக கோடிகளை வாரி இறைக்கும் நெப்போலியன்.. திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்

Nepoleon : நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்ட நெப்போலியன் சமீபத்தில் தனது மகன் தனுஷின் நிச்சயதார்த்தத்தை நடத்தி இருந்தார். இதனால் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் உள்ளது.

இப்படிப்பட்ட நோய் உள்ளவர்கள் 12 வயதிற்கு மேல் இருப்பதே அரிதாகும். ஆனால் தனுஷுக்கு தற்போது 25 வயது ஆகி வரும் நிலையில் அதற்கான சிகிச்சையை தொடர்ந்து பெற்று வருகிறார். தனது மகனுக்காக நெப்போலியன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

மேலும் தனுஷின் திருமணம் ஜப்பானில் நடக்க உள்ளது. இவரால் விமானத்தில் பயணிக்க முடியாத சூழல் இருப்பதால் கப்பல் மூலமாக ஜப்பான் செல்ல உள்ளனர். நெப்போலியன் வீட்டு திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக அவரின் நெருங்கிய நண்பர் சபீதா ஜோசப் சமீபத்தில் கூறி இருக்கிறார்.

நெப்போலியன் மகன் திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்

நெப்போலியன் மற்றும் அவரது குடும்பம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கப்பலில் ஜப்பான் செல்ல இருக்கிறார்கள். மேலும் தனது மகன் திருமணத்திற்காக மிகுந்த சிரமப்பட்டு 100 பேருக்கு விசா வாங்கி உள்ளாராம். நடிகைகள் மீனா, குஷ்பூ போன்றோர் நெப்போலியன் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ரஜினி, கமல் ஆகியோருக்கும் நெப்போலியன் பத்திரிக்கை வைத்துள்ள நிலையில் அவர்களும் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கின்றனர். அரசியலிலும் நெப்போலியன் சில காலம் பயணித்ததால் மிகப்பெரிய விஐபிகள், அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

நடன இயக்குனர் கலா மாஸ்டரும் தனுஷின் திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். பாண்டியராஜன் குடும்பம், நடிகர் கார்த்தி போன்றோரும் இந்த விழாவில் பங்கு பெறுகின்றனர். தன்னுடைய மகனின் திருமணத்திற்காக நெப்போலியன் கோடிகளை வாரி இறைத்து வருகிறார்.

கோலாகலமாக நடக்க உள்ள நெப்போலியனின் மகன் திருமணம்

Trending News