வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டிஆர்பியில் அடித்து துவம்சம் பண்ணும் எதிர்நீச்சல்.. இந்த சீரியலுக்கு முதுகெலும்பாக இருக்கும் பிரபலங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதுவரை சீரியல் வரலாற்றிலேயே இப்படி ஒரு தொடருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததில்லை. மேலும் எதிர்நீச்சலை வைத்து மற்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பியின் சன் டிவி துவம்சம் செய்து வருகிறது.

இந்நிலையில் எதிர்நீச்சல் பிரம்மாண்டமான தொடர் என்றெல்லாம் சொல்ல முடியாது. சாதாரணமாக நம் வீட்டில் அம்மா, மனைவி போன்றோர் எப்படி இருக்கிறார்களோ அதை அப்படியே பிரதிபலிப்பது தான். ஆண்களுக்காக பெண்கள் எவ்வளவு சகித்துக் கொள்கிறார்கள் என்பதை இத்தொடர் காட்டுகிறது.

Also Read : முதல் மரியாதை ராதாவாக மாறிய கருப்பழகி.. சன் டிவி நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்

மேலும் படித்த பெண்கள் திருமணத்திற்கு பின்பு வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அவர்களை எப்படி வெளியுலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் இந்த தொடரின் மையக்கருத்து. மேலும் எதிர்நீச்சலில் நடிகர், நடிகைகள் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தாலும் முதுகெலும்பாக சிலர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இயக்குனர் திருச்செல்வம் இத்தொடரை அருமையாக இயக்கி வருகிறார். இவர் மெட்டிஒலி தொடரில் திருமுருகனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். இதைத்தொடர்ந்து தேவயானியை வைத்து இவர் இயக்கிய கோலங்கள் தொடர் மாபெரும் வரவேற்பை பெற்றது.

Also Read : அண்ணன் தம்பிக்குள் வரப்போகும் சண்டை.. ஏகப்பட்ட திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல்

இப்போது எதிர்நீச்சலின் திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகியவற்றை திருச்செல்வம் கையாண்டு வருகிறார். தொடரின் காட்சிகளை ரசிகர்களிடம் அழகாக காட்டி உள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தானம். பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் தான் என்றாலும் ரசிகர்களுக்கு அலுப்பு வராமல் அதைக் கொண்டு சேர்த்துள்ளார்.

இவற்றையெல்லாம் தாண்டி எதிர் நீச்சலின் இமாலய வெற்றிக்கான காரணம் வசனகர்த்தா தான். திருச்செல்வத்தின் கோலங்கள் தொடரில் ஆர்த்தியாக நடித்த ஸ்ரீவித்யா தான் எதிர்நீச்சலில் வசனம் எழுதி வருகிறார். இவருடைய ஒவ்வொரு வசனங்களும் தொடரை இன்னும் அழகாக்கி வருகிறது.

Also Read : எதிர்நீச்சல் சீரியலுக்கு வச்ச ஆப்பு.. என்ட்ரியானது மெய்சிலிர்க்கூட்டும் புத்தம் புது சீரியல்

Trending News