வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

த்ரிஷாவுக்காக வரிஞ்சு கட்டிட்டு வந்த 4 பிரபலங்கள்.. திருமணத்திற்கு முன்பே உறவு, துவைத்து காய போட்ட நெட்டிசன்கள்

Trisha – Mansoor Ali Khan: நடிகை த்ரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய சர்ச்சை பேச்சு சினிமா வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. சினிமா பிரபலங்கள், மகளிர் அமைப்புகள் அவருடைய பேச்சுக்கு எதிராக பல கண்டன குரல்களை எழுப்பி வருகிறார்கள். இதில் த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசி இருக்கும் ஒரு சில பிரபலங்களின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த சில தவறான விஷயங்களை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் அவர்களை கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

த்ரிஷாவுக்கு சப்போர்ட் பண்ணிய பிரபலங்களை விளாசும் நெட்டிசன்கள்

குஷ்பூ: நடிகை மற்றும் அரசியல்வாதியும் ஆன குஷ்பூ மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு குஷ்பூ ஒரு ஆணும் பெண்ணும் சம்மதம் இருந்தால் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று கருத்தை தெரிவித்து இருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இப்போது அவர் இருக்கும் பிஜேபி கட்சியே அந்த சமயத்தில் குஷ்புவை கைது செய்ய வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி: தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அவர் போலோ சங்கர் என்னும் திரைப்படத்தில் நடித்து தந்தார். அந்த பட விழாவில் போது சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷிடம் நடந்து கொண்ட விதம் எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தற்போது அந்தப் பட விழா கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

Also Read:விஜய்க்கு வராத சங்கம் ஏன் த்ரிஷாவுக்கு மட்டும் வராங்க.? மன்சூருக்காக குரல் கொடுத்த சீமான்

பாலகிருஷ்ணா: தெலுங்கு பட ஹீரோ பாலகிருஷ்ணா திரிஷாவுக்கு ஆதரவாக பேசியிருந்தார். அவருடைய ஒரு சில வீடியோக்களையும் தற்போது நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் போட்டு கிழித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் விசித்ரா ஒரு நடிகரை பற்றி கசப்பான சம்பவத்தை பகிர்ந்திருந்தார். அதுவும் இந்த பாலகிருஷ்ணா தான் என சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

மாளவிகா மோகனன்: நடிகை மாளவிகா மோகனன், மன்சூர் அலிகானின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். மாளவிகா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது உண்டு. இளம் தலைமுறைகளை கெடுக்கும் அளவுக்கு புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து வரும் அவர் இதுபோன்ற சர்ச்சைக்கு கேள்வி எழுப்பலாமா என நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள்.

மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சையான கருத்து என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் இதே போன்ற கருத்துக்களை ஒரு சில ஹீரோக்களும் பேசிய பொழுது யாருமே குரல் எழுப்பவில்லை. தவறான கருத்தை மன்சூர் அலிகான் பேசியதால்தான் அது பெரிய பிரச்சனையானதா என்பது போல் நெட்டிசன்கள் இப்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Also Read:மன்சூர் அலிகான் போல் வம்பில் சிக்கிய ரஜினி.. உங்க வயசுக்கு இப்படி பேசலாமா தலைவரே.!

Trending News