செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தளபதி 67 பட பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.. விஷாலுக்கு பதிலாக ஆக்சன் ஹீரோ

லோகேஷ் கனகராஜ், விஜய் முதல்முறையாக இணைந்த மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது. குறைந்த திரையரங்குகளில் இப்படம் வெளியானாலும் வசூலை வாரி குவித்தது. அதன் பின்பு மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் விஜய் வாரிசு படத்தை முடித்த கையோடு தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Also Read : தீ தளபதி, பேர கேட்டா விசிலடி.. அனல் பறக்க வெளியான வாரிசு செகண்ட் சிங்கிள்

இப்போது தளபதி 67 படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்த படத்தில் மும்பையைச் சேர்ந்த கேங்ஸ்டராக விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பல வில்லன்கள் நடிப்பதாக அவ்வப்போது தகவல் இணையத்தில் வெளியானது. அதில் முக்கிய வில்லனாக விஷால் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தளபதி 67 பட பூஜையில் விஷால் கலந்து கொள்ளவில்லை. மாறாக அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆகையால் விஷால் மற்றும் மிஸ்கின் இருவருமே தளபதி 67 படத்தில் நடிக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதி ஆகியுள்ளது.

Also Read : தளபதி 67 பூஜை போட்டு ஒரு நாள்தான் ஆகுது.. லோகேஷன் சம்பவம் லோடிங், அதுக்குள்ள பல நூறு கோடி வியாபாரமா?

மேலும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் மிரட்ட வருகிறார். தளபதி 67 படத்திற்கான ப்ரோமோ சூட் நடந்து வருவதாக தெரிகிறது. வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு அன்று இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் கிட்டத்தட்ட மூன்று மாத காலத்திலேயே தளபதி 67 படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த ஆண்ட விஜய்க்கு சரியாக போகவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு வாரிசு, தளபதி 67 என்று செம மாசாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : விஜய்யுடன் நடிக்க மறுக்கும் ஹீரோக்கள்.. தளபதி 67க்கு அர்ஜுனை போல் நோ சொன்ன 90ஸ் ஹீரோ

Trending News