செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜயகாந்தின் இறுதி அஞ்சலியில் பங்கேற்காத பிரபலங்கள்.. நச்சுன்னு பேசிய பிரேமலதா

Vijayakanth – Premalatha : கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மறைந்த நிலையில் அவரது இறுதி அஞ்சலியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்த கேப்டனின் மறைவு தமிழக மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரையும் நிலைகுலையச் செய்தது. பலரும் வெள்ளம் போல் திரண்டு விஜயகாந்த்-க்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் சினிமா பிரபலங்கள் பலரும் வெளிநாட்டில் சிக்கி இருந்ததால் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு சூர்யா, கார்த்தி, சிவகுமார், ஜெயம் ரவி, விஷால் போன்ற பிரபலங்கள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

மேலும் கேப்டனின் இறப்பின் போது அஜித் துபாயில் இருந்ததால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு பிரேமலதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது வரை பிரேமலதாவை அஜித் சந்திக்கவில்லை. அதேபோல் வடிவேலுவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது விஜயகாந்த் தான்.

Also Read : தமிழ் சினிமாவில் ஹீரோவை மிஞ்சிய ஸ்மார்ட் வில்லன்கள்.. 90களில் அழகில் மிரட்டிய விஜயகாந்த்தின் உயிர் நண்பன்

ஆனால் நடுவில் இவர்கள் இடையே பிரச்சனை முற்றியது. இதை தொடர்ந்து கடைசியாக விஜயகாந்த்க்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கலாம். வடிவேலு கடைசி வரை கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு வரவில்லை. இந்த சூழலில் பிரேமலதா சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் கேப்டனின் இறுதி ஊர்வலத்திற்கு வந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் விஜயகாந்தின் இறுதி பயணத்தில் கலந்து கொள்ள முடியாதவர்களின் எண்ணமும் கேப்டனின் இடத்தில் தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என பிரேமலதா கூறி இருக்கிறார். இப்போது கேப்டன் இல்லை என்றாலும் உதவி கேட்டு எங்கள் இல்லத்திற்கு வரலாம், கண்டிப்பாக முடிந்த உதவியை செய்கிறோம் என்று பிரேமலதா வாக்கு கொடுத்துள்ளார்.

Also Read : விஜயகாந்த் மகனுக்கு விஷால் கொடுத்த வாக்குறுதி.. இவர் என்ன சொன்னாலும் சிரிப்பு தான் வருது

Trending News