வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சென்னையில் இருந்தும் மனோபாலா இறப்பிற்கு வராத 5 நடிகர்கள்.. துக்கம் விசாரிக்காத பரிதாபம்

மனோபாலா கடந்த மூன்றாம் தேதி கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். சமீபத்தில் தான் காமெடி நடிகர் மயில்சாமியை இழந்து துக்கத்தில் இருந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஓரளவு அதை கடந்து வந்த நிலையில் மறுபடியும் இவருடைய இழப்பு மிகவும் மன கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இவருடைய இறப்பிற்கு பல சினிமா பிரபலங்கள் நேரிலும் மற்றும் ட்விட்டரிலும் அவர்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வந்தார்கள்.

ஆனாலும் சில நடிகர்கள் மனோபாலா இறப்பிற்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அதுவும் அந்த நடிகர்கள் அனைவரும் சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள். இதற்கு அடுத்து அவருடைய இறப்பு செய்தியை கேட்டும் அவர்கள் போகாது தான் கேள்விகளை எழுப்புகிறது. அதிலும் அந்த நடிகர்கள் கூட எல்லாம் மனோபாலா சேர்ந்து நடித்திருக்கிறார். கண்டிப்பாக அப்பொழுது அந்த நடிகர்களுக்கு மனோபாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கும்.

Also read; மனோபாலா இறப்பில் முதல் ஆளாக வந்து கதறிய H. வினோத்.. இவர்களுக்குள் இப்படி ஒரு பந்தமா

அந்த காரணத்திற்காகவாது மனோபாலா குடும்பத்திற்கு போய் ஆறுதல் சொல்லி இருக்கலாம். அதிலும் இவர்கள்தான் வரப்போகிற இளம் நடிகர்களுக்கு முன்னோடியாக இருக்கிறவர்கள். இவர்களே இந்த மாதிரி செய்வது நல்லது இல்லை என்று மனோபாலாவின் நண்பர்கள் மன வேதனையில் பேசி வருகிறார்கள்.

தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, விக்ரம் இவர்கள் அனைவரும் மனோபாலா இறந்த அந்த நாளன்று சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள். இவர்கள் கூட மனோபாலா, குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்திருக்கிறார். சூர்யாவுடன் காக்க காக்க, பிதாமகன், பேரழகன், சிங்கம், கஜினி, மாஸ் என்கிற மாசிலாமணி இது போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

Also read; பட்டதற்கு பின் புத்தி தெளிந்த மனோபாலா.. இனி இதை மாதிரி யாரும் செய்யாதீங்க என கடைசியா கொடுத்து அட்வைஸ்

அதிலும் சூர்யாவின் பிதாமகன் படத்தில் இவருடைய மாமாவாக, ரெண்டு பேரும் சேர்ந்து சோவி உருட்டுவது அந்த சீன் எல்லாம் மறக்கவே முடியாது. அடுத்ததாக தனுஷ் படத்தில் தேவதையை கண்டேன், பொல்லாதவன், பரட்டை என்கிற அழகுசுந்தரம், யாரடி நீ மோகினி, மாப்பிள்ளை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் மாப்பிள்ளை படத்தில் ஜோசியம் பார்க்கிற கேரக்டரில் தனுஷ் இவரை நல்ல வச்சு செய்திருப்பார்.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தில் எதிர்நீச்சல், காக்கி சட்டை, ரஜினி முருகன் மற்றும் சிம்பு படத்தில் சிலம்பாட்டம், விக்ரம் படத்தில் சேது, அருள், அந்நியன் இது போன்ற பல படங்களில் இவர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அப்படி இருக்கையில் அதுவும் ஒரே ஊரில் இருந்தே போகாமல் இருப்பது மிகப்பெரிய வருத்தத்தை கொடுப்பதாக மனோபாலாவின் நண்பர்கள் மன வேதனையை தெரிவித்து வருகிறார்கள்.

Also read; 4 நகைச்சுவை நடிகர்களை இழந்தது தவிக்கும் தமிழ் சினிமா.. கடைசியாக மனோபாலா நடித்த படம்

Trending News