செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சூப்பர் ஹிட் படங்களின் வாய்ப்பை தட்டிக்கழித்த முன்னணி பிரபலங்கள்.. இணையத்தை அலறவிட்ட மொத்த லிஸ்ட்

தமிழ் சினிமாவில் தற்போது பல கதைகளை கொண்ட படங்கள் ரிலீஸானாலும், அப்போது முதல் இப்போது வரை சில படங்களை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் சூப்பர் ஹிட் அடித்த படங்களில் முதலில் நடிக்க மறுத்த ஹீரோக்கள் படம், வெற்றி பெற்ற பிறகு வாயடைத்துப் போயினராம்.

அவ்வாறு சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை தானாகவே தட்டிக்கழித்த நடிகர்களின் படங்களின் பெயரும் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதோ அந்த லிஸ்ட்!

முதல்வன்: முதலில் முதல்வன் படத்துக்கான ஸ்கிரிப்டை ஷங்கர் ரஜினிகாந்த்காக தான் எழுதினாராம். பிறகு ரஜினி அதை தட்டிக் கழிக்கவே, அந்தப் பட வாய்ப்பு விஜய்க்கு சென்றதாம். அவரும் இந்த படத்தில் நடிக்க மறுத்ததால் அர்ஜுன் முதல்வன் படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.

கோ: ஜீவா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த படம் தான் கோ. ஆனால் இந்தப் படத்தில் முதலில் சிம்புதான் நடிக்க இருந்தாராம். சில காரணங்களால் அவர் நடிக்க மறுக்கவே இந்த வாய்ப்பு ஜீவாவிற்கு சென்றதாம்.

நந்தா: சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படம்தான் நந்தா. இந்தப் படத்தின் மூலம்தான் சூர்யாவின் சினிமா வாழ்க்கை வெற்றி பயணமாக தொடங்கியது . ஆனால் இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித்குமார் தான் என்றும், நந்தா படத்தின் கதை முழுமையாக எழுதப்படாமல் இருந்ததால் அஜித்குமார் அந்த வாய்ப்பை தட்டி கழித்ததாகவும் சொல்லப்படுகிறது.

எந்திரன்: ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் உருவாகி தாறுமாறா ஹிட்டடித்த படம்தான் எந்திரன். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது கமலஹாசன் தானாம். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போனதாம்.

காக்க காக்க: கௌதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் சூர்யாவை வித்தியாசமான கோணத்தில் காட்டிய படம் தான் காக்க காக்க. இந்தப் படத்தில் முதலில் நடிக்க அஜித் குமாரையும் விக்ரமையும் கௌதம் அணுகினாராம் . ஆனால் அவர்கள் தட்டிக் கழிக்கவே இந்த பட வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்ததாம்.

கஜினி: தமிழ் சினிமாவில் தற்போது வரை போற்றப்படும் படங்களில் ஒன்றுதான் கஜினி. இந்தப் படம் முதலில் அஜித் குமாருகாக தான் ரெடியான தான். அவ்வளவு ஏன் மிரட்டல் என்ற பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட ரெடி ஆகிவிட்டதாம். ஆனால் சில காரணங்களால் அஜித் படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம்.

தீனா: ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் வெளியான தீனா படம் 2000 ஆண்டுகளில் சூப்பர் ஹிட் படம் ஆனது. இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் என்றும் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

சாமி: விக்ரமின் நடிப்பில் உருவாகி தாறுமாறான ஹிட்டடித்த படம் தான் சாமி. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித்குமார் என்று கூறப்படுகிறது.

tamil-actor-cinemapettai

எனவே இத்தகைய சூப்பர் ஹிட் படங்களை எல்லாம் கைநழுவ விட்ட பிரபலங்கள் யார் யார் என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் தற்போது வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Trending News