திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வெப் சீரிஸில் அதிக ஆர்வம் காட்டும் பிரபலங்கள்.. பல மடங்கு லாபம் பார்க்கும் அஞ்சலி

ஓடிடி தளங்களுக்கு இப்போது அதிக வரவேற்பு கிடைத்து வருவதால் அதில் வெளியாகும் படங்களையும் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். திரைப்படங்களை விட அதில் வெளியாகும் வெப் தொடர்களுக்குத்தான் இப்போது மவுசு அதிகமாக இருக்கிறது. அதனாலேயே தற்போது முன்னணியில் இருக்கும் பிரபலங்கள் கூட அதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து விமல் நடித்திருந்த விலங்கு, எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வதந்தி ஆகிய தொடர்களுக்கும் பலத்த வரவேற்பு கிடைத்தது. அதிலும் வதந்தி வெப் தொடரில் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரமும், நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Also read: வாய்ப்பு இல்லாததால் ‘ஏ’ சர்டிபிகேட் படத்தில் அஞ்சலி.. படுக்கையறை, குளியல் காட்சிகளில் தாராள கவர்ச்சி

இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறதாம். இரண்டு மணி நேரம் வரும் சினிமாவை காட்டிலும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த வெப் தொடர்கள் ஆடியன்ஸை இந்த அளவுக்கு கவர்ந்துள்ளது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதில் இருக்கும் பரபரப்பும் விறுவிறுப்பும் கடைசிவரை குறையாமல் இருப்பது தான்.

அந்த வகையில் இப்போது பல இயக்குனர்களும் திரைப்படங்களை இயக்குவதில் அதிக அலட்சியம் காட்டி வருகின்றனர். அதனாலேயே பல திரைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இறுதியில் தோல்வியை தழுவி விடுகிறது. இது பார்க்கும் ரசிகர்களுக்கும் அதிருப்தியை கொடுத்து விடுகிறது. இதனால் தான் வெப் தொடர்கள் தற்போது பிரபலம் ஆகி வருகிறது.

Also read: வளர முடியாமல் காணாமல் போன 6 இளம் நடிகைகள்.. கவர்ச்சி காட்டியும் வாய்ப்பு கிடைக்காத அஞ்சலி

இதன் மூலம் அதிக கல்லா கட்டி வரும் ஒரே பிரபலம் என்றால் அது அஞ்சலி மட்டும் தான். அவர்தான் இப்போது இந்த தொடர்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதிலும் இப்போது அவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் fall வெப் தொடர் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஆரம்பத்திலேயே சஸ்பென்ஸ் உடன் ஆரம்பித்த இந்த தொடரின் அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு சினிமாவில் மார்க்கெட்டை இழந்திருக்கும் அஞ்சலிக்கு இது நன்றாகவே கை கொடுத்துள்ளது. அதிலும் மூன்று படங்களில் நடித்து வாங்கும் சம்பளத்தை காட்டிலும் ஒரு வெப் தொடரில் நடித்தே அவர் எக்கச்சக்கமாக காசு பார்க்கிறாராம். அந்த வகையில் இவரை போன்றே பல முன்னணி நடிகைகளும் இப்போது வெப் தொடர் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: கிண்டல் கேலிக்கு ஆளான அஞ்சலி.. வாய்ப்பு கிடைத்தால் மட்டும் போதும்

Trending News