ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

நயன்தாரா திருமணத்தால் அசிங்கப்பட்ட பிரபலங்கள்.. எங்களுக்கு அப்படி ஒன்னும் அவசியம் இல்ல

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த வியாழக்கிழமை ஜூன் 9ஆம் தேதி திருமணம் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இவர்களது திருமணத்தை ஒட்டி அன்று ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர்.

மேலும் திருமணம் முடிந்த கையோடு மறுநாள் நயன் மற்றும் விக்கி இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர். ஆனால் கோயிலுக்குள் நயன்தாரா காலனி அணிந்து வந்துள்ளார் என திருப்பதி தேவஸ்தானம் இவர்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

அதற்கு விக்னேஷ் சிவன் தெரியாமல் காலணி அணிந்து விட்டோம் என மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில் இவர்களது திருமண நிகழ்வில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதாவது செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் அங்கு யாரும் போனில் புகைப்படம் எடுக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இவர்களது திருமணத்திற்காக மும்பையில் இருக்கும் பவுன்சர்கள் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பெரும்பாலும் முன்னணி நட்சத்திரங்களை மட்டுமே தெரியும். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்கள் மட்டுமே தெரியும்.

ஆனால் நயன்தாரா திருமணத்திற்கு தற்போது வளர்ந்து வரும் நடிகர்களையும் அழைத்திருந்தனர். ஆனால் அவர்கள் யாரென்று தெரியாததால் பவுன்சர்கள் அவர்களை திருமணத்திற்கு விடாமல் மரியாதை குறைவாக நடத்தியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த சிலர் திருமணத்திற்கு செல்லாமல் திரும்பியுள்ளனர்.

மேலும் பல முன்னணி பிரபலங்கள் இவர்களும் பிரபலங்கள் தான் என கூறிய பிறகு பவுன்சர்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்ட அனுமதித்துள்ளனர். மேலும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனரின் செல்போனை பவுன்சர்கள் பிடுங்கிவிட்டு திருமணத்திற்கு அனுமதித்துள்ளனர். பின்பு அவரும் பிரபலம் என தெரிந்தவுடன் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

Trending News