மக்கள் மத்தியில் என்னதான் டிவி சீரியல்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அதைத் தாண்டி ஒரு சில ரியாலிட்டி ஷோக்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. உதாரணமாக, சமீபத்தில் விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கிலிலும் முன்னிலை பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவி தன்னுடைய அஸ்த சாஸ்திரம் ஆக மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொடங்கி தற்போது வரை 7 எபிசோட் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல சமையல் வல்லுநர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்த்தி சம்பத், ஹரிஷ் ராவ் மற்றும் கவுசிக் ஆகியோர் இதில் நடுவர்களாக உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற 40 நாடுகளில் பிரபலமான நிகழ்ச்சி. தற்போது தெலுங்கில் தமன்னாவும், தமிழில் விஜய் சேதுபதியும் தொகுத்து வழங்குகின்றனர். மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வெள்ளித்திரையின் முன்னணி நடிகையான நிக்கி கல்யாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
சென்ற வாரம் இந்த நிகழ்ச்சியில் குப்பையில் போடும் பொருட்களை வைத்தே போட்டியாளர்கள் சமைக்க வேண்டும் என்ற டாஸ்க்கை நடுவர்கள் வழங்கினார்கள். அதாவது வெட்டப்பட்ட காய்கறி தோல், மீன் முள் போன்றவற்றை வைத்தே சமைக்க வேண்டும்.
இவ்வாறு பரப்பிற்கும் சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லாத இந்த நிகழ்ச்சியில் தற்போது நிக்கி கல்யாணி பங்கேற்று போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்க்கை வழங்க உள்ளதாக தெரிகிறது.
இதனால் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சன் டிவி நிறுவனம் நம்புகிறது. தற்போது சன் டிவி வரும் வாரங்களில் தனது டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்துவதற்காக எடுத்திருக்கும் இந்த உத்தி செல்லுபடியாகுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.