வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரத்த சொந்தங்களாக இருக்கும் 7 பிரபலங்கள்.. இன்று வரை கூட்டணி போடும் ஜோடிகள்

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் ரத்த பந்தங்களாக இருந்து சாதித்த, சாதித்து கொண்டு இருக்கும் பிரபலங்களை காணலாம்.

இளையராஜா – கங்கை அமரன்: இசைஞானி இளையராஜா, கங்கை அமரன் இருவரும் நன்கு அறியப்பட்ட தமிழ் இசை கலைஞர்கள். 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார் இளையராஜா. சமீபத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. கங்கை அமரன் தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், இயக்குனர் என்று பன்முகத்தன்மை கொண்டவர்.

ஊர்வசி – கல்பனா; நடிகைகள் ஊர்வசி, கல்பனா இருவரும் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள சகோதரிகள், நடிகைகள். இருவரும் தங்களது நகைச்சுவையான நடிப்புக்கு அறியப்பட்டவர்கள். ஊர்வசி தமிழ், மலையாளம் என இரண்டிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.கல்பனா இரு மொழிகளிலும் பல படங்களில் நகைச்சுவை வேடம், குணசித்திர வேடம் என்று நடித்துள்ளார். சமீபத்தில் கல்பனா காலமானார் என்பது வருத்தமான செய்தி.

அம்பிகா – ராதா: சகோதரிகள் அம்பிகா, ராதா இருவருமே எண்பதுகளின் பிற்பாதியில், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் மிகவும் பிசியாக இருந்த நடிகைகள். கமல், ரஜினி, சத்யராஜ் என்று அப்போது முன்னணியில் இருந்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். மலையாளத்திலும் இவர்கள் நாயகிகளாக நடித்துள்ளனர். ராதா தற்போது தொலைக்காட்சிகளில் தலை காட்டி வருகிறார், அம்பிகா சீரியல்களில் நடித்து வருகிறார்.

பிரபுதேவா – ராஜு சுந்தரம்: நடன குடும்பத்தில் இருந்து வந்த பிரபு தேவா, ராஜு சுந்தரம் இருவரும் மிக பிரபலமான நடன மாஸ்டர்கள். அதிலும் பிரபுதேவா கதாநாயகன், இயக்குனர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். அதே நேரம் ராஜு சுந்தரம் ஒரு சில படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். ஆனாலும் முன்னணியில் வர இயலவில்லை. இவர்களுடைய இளைய சகோதரர் நாகேந்திர பிரசாத்தும் நடன கலைஞர், நடிகர் என்பது குறிப்பிட தக்கது.

சூர்யா – கார்த்தி: பிரபல நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் சிவகுமாரின் வாரிசுகள். இருவரும் வித்தியாசமான கதைகளில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். இவர்கள் இருவரும் தற்போது முன்னணி நடிகர்கள். கார்த்தி, சர்தார், கைதி 2 ஆகிய படங்களில் பிசியாக இருக்கிறார். சூர்யா வாடிவாசல் படத்தில் பிசியாக இருக்கிறார். இவர்கள் இருவரையும் சேர்த்து விக்ரம் 3 யில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்கிறார்.

செல்வராகவன் – தனுஷ்: கஸ்தூரி ராஜாவின் வாரிசுகளான செல்வராகவன், தனுஷ் இருவரும் துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்கள். அதன் பிறகு தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குனராகவும் முன்னணியில் உள்ளனர். சமீபத்தில் தனுஷ் இயக்குனராக பா.பாண்டி படத்தை இயக்கினார். செல்வராகவன் சானிக் காயிதம் படம் மூலமாக நடிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ஜெயம் ரவி – மோகன் ராஜா: வித்தியாசமான படங்கள் பலவற்றை கொடுத்தவர் ஜெயம் ரவி. சப்தமில்லாமல் பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார். இவர் தனது அண்ணன் இயக்குனர் மோகன் ராஜாவுடன் சேர்ந்து நல்ல படங்களை கொடுப்பார். ஜெயம் படம் மூலம் இருவரும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்கள். தனி ஒருவன் என்ற பெரிய ஹிட் படத்தையும் கொடுத்துள்ளனர்.

Trending News