தமிழ்நாட்டில் பலரும் தமிழ் நாட்டை வெற்றிப் பாதைக்கு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டனர்.
அப்படி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையில் தேர்தல் களத்தில் இறங்கியவர் கமல்ஹாசன். கோவையில் தெற்கு பகுதியில் போட்டியிட்டு 51,481 வாக்குகளை பெற்றுள்ளார். முதல் முறையாக தனியாக நின்று இவ்வளவு வாக்கு பெற்று சாதனை படைத்துள்ளார்.
நடிகை ஸ்ரீபிரியா மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு 14,904 வாக்குகள் பெற்றுள்ளார்.
நடிகை குஷ்பு பாஜக சார்பாக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 39,405 வாக்குகள் பெற்றுள்ளார்.
மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிட்டு 428 வாக்குகள் பெற்றுள்ளார்.
பாடலாசிரியர் சினேகன் விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக போட்டியிட்டு 16,939 வாக்குகள் பெற்றுள்ளார்.
மயில்சாமி இவர் சென்னையிலுள்ள விருகம்பாக்கம் தொகுதியில் எந்த கட்சியுடனும் சேராமல் தனியாக போட்டியிட்டு 1440 வாக்குகளை பெற்றுள்ளார்.
மக்கள் பொருத்தவரை புதிதாக தேர்தல் களத்தில் இறங்கியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால் பெருவாரியான மக்கள் இந்த மாதிரி சுயேட்சையாக நிற்கும் வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்காமலேயே சென்றுவிடுகின்றனர். தற்போது அந்த பட்டியலில் பல நட்சத்திரங்கள் இடம்பிடித்துள்ளார்.