செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

லோகேசை மிரட்டி தான் விக்ரம் பட வாய்ப்பை வாங்கினேன்.. அவர் வாயாலே ஒத்துக்கிட்டாரு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் திரைப்படத்தை விட கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தாறுமாறாக உள்ளது. ஏனென்றால் இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் நேற்று நேரு ஸ்டேடியத்தில் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் வெளியாகி படு மாஸாக மிரட்டி உள்ளது.

இதில் கமலஹாசனுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில், காம்போ இந்தப் படத்தில் சரியாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என டிரைலரை பார்த்தாலே ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர். வருகின்ற ஜூன்3-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி லோகேசை மிரட்டி தன் சான்ஸ் கேட்டுள்ளார் என்ற விஷயம் அவர் வாயாலே தெரியவந்திருக்கிறது.

விக்ரம் படத்தில் நடிக்க வேண்டுமென்று லோகேஷ் இடம் நேரில் சென்று விஜய் சேதுபதி கேட்டபோது, லோகேஷ் அதற்கு மறுத்திருக்கிறார். பின்பு எங்கு சுற்றினாலும் கடைசியாக என்னிடம்தான் வரவேண்டும் என விஜய்சேதுபதி லோகேசை மிரட்டி உள்ளார்.

இதனால் லோகேஷ் கனகராஜூம் விஜய்சேதுபதியை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு, அவரே வந்து விரும்பி கேட்டதால் நிச்சயம் சான்ஸ் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதன் பிறகுதான் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

இப்படி விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடிக்க ஆசைப்பட்டது ஒருபுறமிருந்தாலும், இந்தப்படத்தில் விஜய் சேதுபதி வெறித்தனமான நடிப்பைக் காட்டியிருக்கிறார் என்று சொல்லவேண்டும்.

ஏனென்றால் நேற்று வெளியான ட்ரெய்லரில் ஒரு குழுவின் தலைவராக விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். விக்ரம் ட்ரைலரைப் பார்த்த பிறகு படம் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

Advertisement Amazon Prime Banner

Trending News