வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஏழைகள் வயித்தெரிச்சலை கொட்டிக் கொள்ளும் அதிதி சங்கர்.. வாய்ப்பைத் தட்டிப் பறிப்பது ஒரு பொழப்பா?

Aditi Shankar: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் வாரிசாக திரை துறையில் நுழைந்தவர் தான் அதிதி ஷங்கர். தன்னுடைய மகள் படித்து மிகப்பெரிய மருத்துவராக வேண்டும் என்ற கனவில் ஷங்கர் இருந்தார். அதன்படி எம்பிபிஎஸ் படிப்பையும் முடித்த அதிதி எனக்கு சினிமாவில் தான் ஆர்வம் என்று அப்பாவின் பேச்சையும் மீறி நடிகையானார்.

சினிமாவைப் பொறுத்தவரையில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தானாகவே நிறைய வாய்ப்புகள் வருவது சாதாரணம்தான். அப்படி அதிதி சங்கருக்கு கேட்காமலே நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கிறது. கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் அறிமுகமான அதிதி அடுத்ததாக மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.

Also Read : கடைசி 5 படங்களில் ரஜினி குவித்த கோடிகள்.. ஷங்கர் பட கலெக்சனை தூக்கி சாப்பிட வைத்த நெல்சன்

பன்முகத தன்மை கொண்ட அதிதி தன்னுடைய முதல் படமான விருமன் படத்தில் இருந்து மதுரவீர அழகுல என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி வைரலானது. ஆனால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜலட்சுமி தான் முதலில் இந்த பாடலை பாடியிருக்கிறார்.

அதன் பிறகு அதிதி சங்கரும் விருப்பப்பட்டு இந்த பாடலை பாடி, இவர் குரலில் தான் விருமன் பாடல் இடம் பெற்றது. இதனால் ராஜலட்சுமி பெரிதும் வருத்தப்பட்டு பேசியிருந்தார். இப்போது அதே சம்பவம் தான் மாவீரன் படத்திலும் அரங்கேறி இருக்கிறது. அதாவது வண்ணாரப்பேட்டையில் என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியிருந்தார்.

Also Read : 30 ஆண்டுகளில் ஷங்கரின் சொத்து.. இந்தியன்-2 சம்பளம் சேர்த்து 60 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?

இந்த பாடல் ரசிகர்களின் பேவரைட் பாடலாக அமைந்தது. ஆனால் முதலில் இந்த பாடலுக்கான வாய்ப்பு மீனாட்சி இளையராஜா என்பவருக்கு தான் கிடைத்திருக்கிறது. அந்தப் பாடலையும் அவர் பாடிவிட்டாராம். அதன் பிறகு அதிதி சங்கரும் இந்த பாடலை பாடிய நிலையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இவர் பாடியதை ஓகே சொல்லி விட்டார்களாம்.

குட் நைட் போன்ற சில படங்களில் பாடியுள்ள மீனாட்சி இளையராஜா சிவகார்த்திகேயன் படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியில் இருந்தாராம். கடைசியில் அவர் குரலில் இந்த பாடல் இடம்பெறவில்லை என்பது அவருக்கு வருத்தமாக இருந்தது என கூறியிருக்கிறார். இதை அறிந்த ரசிகர்கள் தொடர்ந்து ஏழையின் வயிற்றெரிச்சலை அதிதி சங்கர் கொட்டிக் கொள்கிறார் என்று விமர்சித்து வருகிறார்கள்.

Also Read : அஜித்தை விட 10 மடங்கு அதிகமா பயமுறுத்தும் போலா ஷங்கர்.. சர்ச்சையை கிளப்பி, வாயை புண்ணாக்கிய இயக்குனர்

Trending News