வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தோல்வி பயத்தில் கைராசி நடிகரை கூப்பிடும் நெல்சன்.. இளம் வயது ரஜினியாக நடிக்க போறாராம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தை தொடர்ந்து, அவருடைய 169-வது படமான ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கப் உள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட பிரபலம் சிவராஜ் குமார் இவர்களுடன் இந்தப்படத்தில் இளம் வயது ரஜினி கதாபாத்திரத்தில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபலம் ஒருவர் இணைய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது

சமீபத்தில் ஜெயிலர் படத்திற்கான போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. தற்போது இந்தப்படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகி அதை ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர். இந்தப்படத்தில் பயங்கரமான கேம்ஸ்டர் கும்பல் ஒன்று சிறையை உடைக்க பிளான் போடுகிறது.

அப்போது அந்த சிறையில் தலைமை செயலராக பணியாற்றி ரஜினிகாந்த் அவர்களது திட்டத்தை தடுத்து, சிறையை எப்படி காப்பாற்றுகிறார் என்பதும், அந்த கேங்ஸ்டர் கும்பலை எப்படி வளைத்து பிடிக்கிறார் என்பதுதான் ஜெயிலர் படத்தின் கதை. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்கப்பட உள்ளது.

ஜெயிலர் திரைப்படம் ஒரு ஜெயில் அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை படமாக்க இருக்கிறார்களாம். இந்தப் படத்திலும் ரஜினிக்கு பிளாஷ்பேக் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் இளம் வயது ரஜினியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய ஆரம்பகால சினிமா பயணத்தில் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர்.

அப்போது அவர் ரஜினி போன்றே பேசுவது, அவருடைய ஸ்டைல், நடை, உடை, பாவனைகளை அப்படியே செய்துகாட்டி ரசிகர்களிடம் கைதட்டு வழங்கியவர். அவருக்கு தற்போது ரஜினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கப் போகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. அதேபோன்று நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் ஜெயிலர் படத்தின் மூலம் விட்டதைப் பிடிக்க வேண்டுமென இருவரும் பக்கா பிளான் போட்டு சிவகார்த்திகேயனை இந்த படத்தில் இணைத்து இருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்களான டாக்டர், டான் போன்றவை 100 கோடி வசூலை பெற்று ஹீரோக்களின் டாப் லிஸ்ட்டில் இருக்கிறார். அவர் மட்டும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தால் படம் வேற லெவலுக்கு ஹிட் கொடுக்கும்.

Trending News