விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, கன்னடா, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழிலும் தொடர்ந்து விறுவிறுப்பாகவும் வெற்றிகரமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுமார் 14 சீசன்களைத் தாண்டி, வரும் அக்டோபர் மாதம் 15 வது சீசன் தொடங்க உள்ளது. இந்த ரியாலிட்டி ஷோவை சல்மான்கான் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.
இவர் பிக்பாஸ் ஹிந்தி 14 சீசன் நிகழ்ச்சியை தொகுப்பதற்காக மட்டுமே ஒரு வாரம் சுமார் 20 கோடி சம்பளமாக வாங்குகிறார். தற்போது, ஹிந்தியில் பிக்பாஸ் 15 வது சீசன் தொடங்கவுள்ளது.
இந்த சீசனை தொகுத்து வழங்குகின்ற சல்மான்கான் சுமார் 25 கோடியை சம்பளமாக கேட்டு உள்ளார். மொத்தமாக இவர் பிக்பாஸ் 15-வது சீசனில் மட்டும் சுமார் 350 கோடி வரை சம்பாதிக்க உள்ளார்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், ‘இதனால்தான் படத்தில் நடிப்பதை விடுத்து ரியாலிட்டி ஷோக்களில் பிரபலங்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்’ என்பதை உணர்ந்துள்ளனர்
எனவே சினிமாவில் மெனக்கெட்டு நடிப்பதற்கு பதில் ரியாலிட்டி ஷோக்களை வழங்குவது எளிது என்பதே சினிமா பிரபலங்களின் எண்ணமாகும். இருப்பினும் ஒரே நிகழ்ச்சியில் 350 கோடி சம்பாதிக்கும் சல்மான்கானை திரைத்துறையே வியந்து பார்க்கிறது.