Rajini-Kamal: சிவாஜி எம்ஜிஆர் எப்படியோ அப்படித்தான் ரஜினி கமல். இப்போது விஜய் அஜித், தனுஷ் சிம்பு என போட்டி உருவாவதற்கும் இவர்கள் தான் முக்கிய காரணம்.
அதில் ரஜினி, கமல் இருவரும் நெருங்கிய நண்பர்கள். பொது இடங்களில் கூட கட்டி அணைத்து முத்தமிட்டு கொள்ளும் அளவுக்கு பாசக்காரர்கள்.
ஆனால் அவர்களின் ரசிகர்கள் எப்போதுமே எதிரதிர் துருவம் தான். அதனாலேயே இருவரின் படங்கள் வரும் போது சோசியல் மீடியா ரணகளமாக இருக்கும்.
இந்நிலையில் கமலின் மூத்த சகோதரரான சாருஹாசன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் ரஜினியை கடவுள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிர்வை கிளப்பிய ஆண்டவரின் ரத்த உறவு
அதேபோல் கமலுக்கு மக்களிடம் செல்வாக்கு கிடையாது. ரஜினியை மக்கள் கடவுளாக பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
இதேபோல் எந்த நடிகருக்காவது இருக்கிறதா என்று கேட்டால் எம்ஜிஆரை சொல்லலாம். ஆனால் ரஜினி அளவுக்கு மக்கள் செல்வாக்கு கொண்டவர் யாரும் கிடையாது.
அவர் தன்னை அறிவாளி என்று சொல்ல மாட்டார். தனக்கு தெரியாத விஷயத்தை தான் வெளிப்படையாக சொல்வார். ஆனால் கமல் அப்படி கிடையாது தன்னை அறிவாளி என்று சொல்வார்.
அதேபோல் எனக்கு இதெல்லாம் தெரியும் என்று வெளிப்படுத்திக் கொள்வார். மேலும் கமல் அருமையாக நடிப்பார். ஆனால் ரஜினி படங்கள்தான் வெற்றிகரமாக ஓடும்.
அதனால் ரஜினிக்கு தான் எம்ஜிஆரை விட மக்கள் மத்தியில் ஈர்ப்பு இருக்கிறது என அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். சொந்த அண்ணனே கமல் குறித்து இப்படி பேசி இருப்பது தற்போது அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.