வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜிகர்தண்டா 2 படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணையும் பிரபலம்.. 150 கோடியை குறிவைத்த கார்த்திக் சுப்புராஜ்

2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமிமேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டா பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு ‘வேறுசில குற்றங்களும், ஒரு கலையும்’ என்ற தலைப்பில் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகத்துக்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Also Read: அசால்ட் சேது கேரக்டருக்கு பாபி சிம்ஹா முதல் சாய்ஸ் இல்லையாம்.. தேசிய விருதை விட்டுக் கொடுத்த நடிகர்

இந்தப்படத்தின் ஃப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் அனைத்தும் ஏற்கனவே ஆரம்பித்த நிலையில், முதல் பாகத்தில் நடித்து தேசிய விருதைத் தட்டிச் சென்ற பாபி சிம்ஹா இரண்டாம் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன் எஸ்பி சூர்யாவும் இணைந்து கலக்க போவதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக எஸ்ஜே சூர்யா உடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி முடித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

Also Read: ஜிகிர்தண்டா 2 அசால்ட் சேதுவாக நடிக்கப் போகும் மாஸ் ஹீரோ.. மரண அப்டேட் வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

மேலும் ஜிகர்தண்டா 2 படத்தின் படக்குழு 150 கோடியை படத்தின் ரிலீசுக்கு முன்பே சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைக்கான பிசினஸ் மூலம் நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை மியூசிக்கல் கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

ஜிகர்தண்டா படத்தில் முதல் பாகத்தில் ஹீரோவாக சித்தார்த் நடித்த நிலையில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க போகிறாராம். கடந்த சில நாட்களாக இந்த படத்தை குறித்த அப்டேட் வரிசையாக வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த மாதம் அக்டோபரில் ஜிகர்தண்டா 2 படத்திற்கான படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Also Read: தமிழ் சினிமாவின் 7 சூப்பர் ஹிட் படங்களை கெடுத்த இயக்குனர்கள்.. கேவலப்படுத்தி ஒஸ்ட் ரீமேக் செய்த நடிகர்கள்

Trending News