வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அவமானப்படுத்தியும் இடி தாங்கியாக குரல் கொடுத்த மன்சூர்.. ஒரே பேட்டியில் விஜய்க்கு வைத்த கொட்டு

Trisha : நேற்றைய தினம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் திரிஷா பற்றிய செய்தி தான். அதாவது ஏவி ராஜு ஊடகங்களில் திரிஷா மற்றும் சினிமாவில் உள்ள நடிகைகளை பற்றி தவறாக கூறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் பூதாகரமாக எடுக்க திரிஷாவுக்கு ஆதரவாக ட்விட் செய்து வந்தனர்.

அந்த வகையில் இயக்குனர் மற்றும் நடிகரான சேரன், பாடகி சின்மயி ஆகியோர் திரிஷாவுக்கு ஆதரவாக பேசியிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக திரிஷாவுக்கு சப்போர்ட் செய்து நடிகர் மன்சூர் அலிகான் பேசி இருக்கிறார். ஏற்கனவே த்ரிஷா மற்றும் மன்சூர் அலிகான் இடையே பிரச்சனை நடந்தது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இப்படி இருக்கும் நிலையில் திரிஷாவுக்கு சப்போர்ட் செய்து மன்சூர் அலிகான் பேசி இருப்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அதாவது திரைத்துறையில் இருக்கும் சகோதரிகள் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களைப் பற்றி ஏதாவது சொன்னால் எங்களை தான் சேரும்.

Also Read : தேரை இழுத்து தெருவில் விட்ட அரசியல்வாதி.. சிங்கப்பெண்ணாக மாறி திரிஷா போட்ட பதிவு

மேலும் திரிஷாவை பற்றி இவ்வளவு தரகுறைவாக பேசிய நபர் அருவருக்கத்தக்க உடையவர். இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி இந்த செயலை கடும் கோபத்துடன் பார்க்கிறது அவர் மீது தக்க தண்டனை எடுக்க வேண்டும் என ஆக்ரோஷமாக மன்சூர் அலிகான் பேசி இருந்தார்.

திரிஷாவும் இந்த சம்பவத்திற்கு தனது வக்கீல் சரியான நடவடிக்கை எடுப்பார் என ட்விட் போட்டிருந்தார். சிறிது நேரத்திலேயே த்ரிஷாவை பற்றி தவறாக பேசிய ஏவி ராஜு நான் த்ரிஷானு சொல்லல த்ரிஷா மாதிரினு சொன்னேன் என்று பத்திரிக்கையாளர் முன் மன்னிப்பு கேட்டிருந்தார்.

திரிஷாவை அவமானப்படுத்தினாலும் மன்சூர் அலிகான் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில் தன்னுடன் நடித்த கதாநாயகி என்ற பெயரில் விஜய் தற்போது வரை எதுவுமே பேசாமல் இருக்கிறார்.

Also Read : கல்யாணம் ஆனாலும் மவுஸ் குறையாமல் சுற்றும் நயன்தாரா.. திரிஷாவை ஓரங்கட்ட கமிட்டான 6 படங்கள்

Trending News