புதன்கிழமை, ஜனவரி 15, 2025

GV Prakash: சைந்தவி ஒழுக்கமான பொண்ணு, இப்ப காதல் கசந்து விட்டதா.? ஜிவி பிரகாஷை கைகூப்பி கேட்கும் பிரபலம்

நட்சத்திரங்களின் அடுத்தடுத்த விவாகரத்து செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சமீபத்தில் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதை அடுத்து இன்று ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவருமே தாங்கள் பிரிய போவதாக சமூக வலைத்தளத்தில் அறிக்கை விட்டிருக்கின்றனர். இதனால் இரு குடும்ப உறவினர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று பிரபலம் ஒருவர் கைகூப்பி கேட்டுள்ளார். அதாவது சினிமாவை பார்த்து தான் ரசிகர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரிவதும் ரசிகர்கள் எடுத்துக்காட்டாக கொள்ளக் கூடாது.

சைந்தவி, ஜிவி பிரகாஷ் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பும் பிரபலம்

தமிழ்நாடு கலாச்சாரம் என்ன ஆகும் என்று கேள்வி கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர் கே ராஜன். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்தியே பரபரப்பை ஏற்படுத்தி வேதனைப்படுத்தியது. இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு, ரஜினியின் மனதை புண்படுத்தி விட்டு கோர்ட்டுக்கு போய் விட்டனர்.

இதே போல் அவர்களது ரசிகர்கள் பின்பற்றக் கூடாது. இப்போது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சைந்தவி என்னுடைய உணர்ச்சிகள் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது.

சைந்தவி மிகவும் ஒழுக்கமான, நல்ல பெண். மனசார காதலித்து கல்யாணம் செய்து கொண்டது. கல்யாணத்திற்கு பின் காதல் கசந்து விடுமா. மீண்டும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து வாழ வேண்டும் என்று கை கூப்பி கேட்பதாக ராஜன் கூறியிருக்கிறார்.

Trending News