ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ப்ளூ சட்டை மாறனுக்கு நெருங்கி வரும் ஆபத்து.. பொறுமையாகக் காத்திருக்கும் எதிரிகள்

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு படத்தை பற்றியும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக திரை விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் ப்ளூ சட்டை மாறனை தெரியாத ஆட்களே கிடையாது என்றுதான் கூறவேண்டும். தனது வார்த்தைகளால் விமர்சனத்தின் மூலம் பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை வெறுப்படையச் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

பல படங்களை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் தற்போது ஆன்ட்டி இந்தியன் எனும் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை விரைவில் திரையில் வெளியிட திட்டமிட்டுருந்த ப்ளூ சட்டை மாறன் சென்சார் போர்டுக்கு படத்தை அனுப்பி உள்ளார்.

ஆன்ட்டி இந்தியன் படத்தை பார்த்த சென்சார் போர்டு பல காட்சிகளை நீக்க வேண்டும் என கூறி படத்தை திருப்பி அனுப்பியது. ஆனால் ப்ளூ சட்டை மாறன் ஒரு சில காட்சி மட்டும் எடுத்துவிட்டு  மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பியுள்ளார். பின்பு ஆன்ட்டி இந்தியன் படத்தை பார்த்த சென்சார் போர்ட் தற்போது படத்தை வெளியிட அனுமதித்துள்ளது.

இதனால் ப்ளூ சட்டை மாறன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் படத்தில் பேசப்படும் காட்சிகள் எதுவும் நீக்காமல் இருப்பதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படத்தை எந்த தேதியில் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்து வருகின்றனர்.

தற்போது இயக்குனர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறன் படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளனர். அதற்கு காரணம் ப்ளூ சட்டை மாறன் பல இயக்குனர்களை கடுமையாக தகாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அதனால் இவர் படத்தை எப்படி இயக்கியுள்ளார் என்பதை பார்ப்பதற்காகவே இயக்குனர்கள்  காத்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

anti indian
anti indian

மேலும் தயாரிப்பாளர்கள் பலரும் இப்படத்திற்கு எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளனர். ப்ளூ சட்டை மாறன் திரைப்படம்  ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை என்றால் இத்தனை நாட்களாக விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறனை பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பார்கள் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இதனால் தற்போது ப்ளூ சட்டை மாறன் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி வருவதாகவும், எந்த ஒரு காட்சியையும் கட் செய்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News