செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

இந்த 13 இடங்களில் வெட்டி விட்ட சென்சார் போர்டு.. இதுவரை விஜய் படத்திற்கு நடக்காத கெட்டபெயர்

Leo Censored Cut: நின்னா குத்தம், நடந்தா குத்தம் என்பது போல் தான் இப்போது விஜய்யின் நிலைமை ஆகிவிட்டது. லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகியதிலிருந்தே விஜய்க்கு பயங்கர சிக்கல் ஏற்பட்டு விட்டது. மது குடிப்பது போல், சிகரெட் புகைப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது என சர்ச்சைகள் கிளம்பியது. பின்னர் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடப்பதற்கும் சிக்கல்கள் ஏற்பட்டது.

போதாத குறைக்கு லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியிட்ட ரோகிணி தியேட்டர் சேதப்படுத்தப்பட்டது இன்று வரை பெரிய பேசும் பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் தான் அந்த ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை பெரிய பிரச்சனையை கிளப்பியது. விஜய்யை போல் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் இப்படி தகாத வார்த்தை பேசியது ரொம்பவும் தவறு என குரல்கள் எழுப்பப்பட்டிருக்கிறது.

Also Read:லியோ படத்தில் இதுவரை தெரியாத 5 ரகசியங்கள்..150 நாளா மைனஸ் டிகிரியில் விஜய் செய்த வேலை

இந்த நிலையில்தான் லியோ படத்தின் ட்ரெய்லரை சென்சார் கட் செய்யாமல் வெளியிட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அப்படிப்பட்ட வீடியோவை ஒளிபரப்பியதற்காக பல தியேட்டர்களுக்கு மத்திய அரசின் சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. தற்போது எந்தெந்த இடங்களில் சென்சார் கட் செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலையும் வெளியிட்டு இருக்கிறது.

லியோ படம் கிட்டத்தட்ட 13 இடங்களில் சென்சார் கட் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை விஜய் படங்களுக்கு இப்படி அதிகமாக சென்சார் கட் செய்யப்பட்டதே கிடையாது. இந்த படத்தில் கட் செய்யப்பட்டு இருக்கும் விஷயங்கள் விஜய் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அளவிற்கு அதிக வன்முறை, தகாத வார்த்தை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் என இருக்கிறது.

Also Read:விஜய்க்கு பெரிய முட்டு கொடுக்கும் அண்ணன்.. நம்ம குட்டு வெளி வந்துரும்னு நியாயப்படுத்தும் நடிகர்

மது, சிகரெட், போதை பொருள் உபயோகிப்பது போல் இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கும் காட்சிகள் நிறைய கட் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் படம் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு ரொம்பவும் மோசமான தகாத வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டிருக்கும் இடங்களிலும் வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருக்கின்றன.

சண்டை காட்சிகள், கொலை செய்யும் காட்சிகள், வெடிகுண்டு வெடிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் அதிகமாக வன்முறை மற்றும் ரத்தம் தெறிப்பது போல் காட்டப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சீன்களில் எல்லாம் 30 சதவீதம் பிளர் செய்யும் படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு சில இடங்களில் போதைப் பொருட்களின் பிராண்டு நேம் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த காட்சிகளும் மியூட் செய்யப்பட்டு இருக்கிறது.

Also Read:விஜய்யை விட பல மடங்கு உயர்ந்த மகேஷ் பாபு.. இவங்கள வச்சுக்கிட்டு ஆணிய புடுங்க முடியாது

- Advertisement -spot_img

Trending News