ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

விஜய்க்காக இறங்கி வேலை பார்த்த VP.. சென்சார் அதிகாரிகள் சொன்ன ஒரு வார்த்தை, கோட் முதல் விமர்சனம்

GOAT: வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியின் கோட் அடுத்த வாரம் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் விஜயின் கெட்டப் ஆடியன்ஸ் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்தது.

அதிலும் மூன்றாவது பாடலில் ஏஐ டெக்னாலஜி சொதப்பிவிட்டதாக கருத்துக்கள் எழுந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் அதை சரி செய்து ட்ரைலரில் யாரும் எதிர்பார்க்காத இளம் விஜயை கண் முன் காட்டினார் வெங்கட் பிரபு.

இது பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் தற்போது மற்றொரு தகவல் கசிந்துள்ளது. அதாவது கோட் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஆஹா ஓஹோ என பாராட்டி தள்ளி இருக்கின்றனர்.

படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. டைம் போனதே தெரியல. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக இருக்கு என தங்கள் முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளனர். அதன்படி கிளைமேக்ஸ் காட்சியில் வெங்கட் பிரபு ஒரு புதுமையை செய்திருக்கிறார்.

கோட் முதல் விமர்சனம்

பொதுவாக இறுதி காட்சிகளில் ஹீரோ வில்லன் சண்டை போடுவது போல் இருக்கும். ஆனால் கோட்படத்தில் அது சற்றே வித்தியாசப்பட்டு அட இது கூட நல்லா இருக்கு என ஆடியன்ஸ் நினைக்கும் படி எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

ஏற்கனவே கிளைமாக்ஸ் காட்சிகள் விஜயகாந்த் ஏ ஐ காட்சிகள் வரும் என கூறப்பட்டது. அதன்படி சில நிமிடங்கள் வரும் அந்த காட்சி படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என படத்தை பார்த்தவர்கள் கூறி இருக்கின்றனர்.

இதனால் கோட் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது இன்னும் அதிகரித்துள்ளது. அதிலும் கேப்டனை மீண்டும் திரையில் காண போகிறோம் என்ற ஆவல் அவருடைய ரசிகர்களுக்கும் அதிகமாக இருக்கிறது. ஆக மொத்தம் விஜய்க்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து இறங்கி செய்திருக்கிறார் வெங்கட் பிரபு.

கோட் கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் புதுமை

Trending News