செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசு சக்சஸ் ரேட்டை இப்பவே உறுதி செய்த சென்சார் போர்டு.. கதிகலங்கிய வம்சி

சென்சார் போர்டுக்கு, வாரிசு படக்குழு வாய்ஸ் ட்ராக் ரெடி ஆகாமல் சும்மா ஒரு டம்மியான டிராக் உருவாக்கி அனுப்பி வைத்துள்ளனர்.
படத்தை முழுசா பார்த்த சென்சார் போர்டு அதற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. தமன் இப்பொழுது பேக்ரவுண்ட் மியூசிக் மற்றும் வாய்ஸ் டிராக் ரெடி பண்ணி கொண்டிருக்கிறார்.

மேலும் படத்தின் நீளம் மிகவும் ஜாஸ்தியாக இருக்கிறதாம். இந்தப் படம் இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் ஓடும் ஒரு படமாக இருக்கிறது. இதனாலேயே இந்தப் படத்திற்கு நிறைய நெகட்டிவ் ரிமார்க்ஸ் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வருகிற நான்காம் தேதி ரிலீஸாகும் என்று படக்குழு தரப்பில் கூறியிருக்கின்றனர்.

Also Read: இந்தியாவிலேயே அவர்தான் ஒரே சூப்பர் ஸ்டார், மறுத்த 3 பாலிவுட் ஹீரோக்கள்.. மறுப்பு தெரிவிக்காத விஜய்யின் பேராசை

இப்படி படத்தின் நீளம் ஜாஸ்தியாக இருப்பதால் அதுவே படத்திற்கு குறையாக அமைகிறது. சமீபத்தில் வெளி வந்த லென்தி படங்கள் எதுவுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. அதனால் சென்சார் போர்டு சில அறிவுரைகளை படக்குழுவிற்கு வழங்கியிருக்கிறது.

ஆனால் இந்தப்படத்தில் எல்லாமே தேவைப்படும் காட்சிகள் என்பதால் படத்தின் நீளத்தை குறைப்பதாக தெரியவில்லை, எனவே இந்த படம் குறைந்தது 2 மணி 45 நிமிடங்களாவது ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டருக்குப் போனால் மக்கள் குறைந்தது மூன்று மணி நேரம் இந்த படத்திற்காக செலவிட வேண்டியது இருக்கும்.

Also Read: உங்க பங்ஷனால் போலீசுக்கு தான் தலைவலி.. ரசிகர்கள் செய்த வேலையால் தில் ராஜிக்கு வந்த நெருக்கடி

சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட், கேஜிஎப்-2 போன்ற படங்கள் நெடுநேரம் ஓடுவதால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் படம் ஓடுவதால் சில தேவையில்லாத காட்சிகள் இருக்கும் என்பது மக்கள் மனதில் பதிந்து உள்ளது. இதனாலேயே மக்கள் தியேட்டரில் வந்து படத்தை பார்க்கும் பழக்கத்தை கைவிடுகின்றனர்.

இப்பொழுது இந்த நிலைமை இதே வாரிசு படத்துக்கு வந்து விடுமோ என்று படக்குழுவினர் கலக்கத்தில் இருக்கின்றனர்.வருகிற 12-ஆம் தேதி இந்தப் படம் அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆக உள்ளது. அதிகாலை 4 மணிக்கு காட்சிக்கு சென்னையில் மட்டும் 50 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read: வாரிசுக்கு துணிவு காட்டிய பயம்.. அதிரடியாக விஜய் போட்ட கட்டளை

Trending News