பொதுவாக ஒரு நாள் போட்டிகளில் 100 பந்துகளில் சதம் அடிப்பதே பெரிய விஷயமாக கருதப்படும் இந்த காலத்தில், டெஸ்ட் போட்டிகளில் 100 பந்துகளுக்கும் குறைவாக சந்தித்து சதமடித்த வீரர்கள் பலர் உள்ளனர்.
டெஸ்ட் போட்டியா அல்லது ஒருநாள் போட்டியா என்று சந்தேகப்படும் அளவிற்கு ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளனர். அப்படி ஒரு போட்டி அல்லாமல் பல டெஸ்ட் போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட் உள்ள சதங்கள் அடித்த வீரர்களை இதில் காண்போம்,
விரேந்திர சேவாக் (7 சதங்கள்) – எப்போதுமே டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடக்கூடியவர் வீரேந்திர சேவாக். இவர் மூன்று முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசியுள்ளார். இவர் 7முறை 100க்கும் குறைவான பந்துகளை சந்தித்து சதம் அடித்துள்ளார்.

ஆடம் கில்கிறிஸ்ட் (6 சதங்கள்): ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட் 6முறை அதிரடி ஆட்டம் ஆடி100 பந்துகளுக்கும் குறைவாக சந்தித்து சதம் விளாசியுள்ளார்.

டேவிட் வார்னர், கிறிஸ் கெய்ல், பிரண்டன் மெக்கல்லம். (4 சதங்கள்) – இவர்கள் மூவரும் நான்கு முறை 100 பந்துகளுக்கு குறைவாக சந்தித்து சதத்தை எட்டியுள்ளனர்.

இயான் போத்தம், சாகித் அப்ரிடி. (3 சதங்கள்) – எப்பொழுதுமே அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய இவ்விருவரும் தமது அணிக்காக மூன்று முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்துள்ளனர்.

ராஸ் டைலர். (2 சதங்கள்) – நியூசிலாந்து அணியில் சீனியர் பிளேயர் இவர். கிட்டதட்ட 40 வயது நெருங்கிய இவர் இன்றும் அணியில் அற்புதமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு அதிவேக சதத்தை நியூசிலாந்து அணிக்காக அடித்துள்ளார்.
