புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நீங்க ஜீ தமிழில் நடிச்சது போதும்.. சன் டிவிக்கு வாங்க என வில்லி நடிகையை கூட்டிச்சென்ற நிறுவனம்

என்னதான் தியேட்டரில் கோடிக்கணக்கில் செலவுசெய்து படங்கள் வெளியிட்டாலும் அது ஒரு நாள் பொழுது போக்கு தான். ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் வாரத்தில் ஏழு நாட்களும் பொழுதை கழிப்பது சீரியலில் தான்.

பெண் ரசிகைகளை கவர்வதற்காகவே காலையில் எழுந்து இரவு தூங்கும் வரை டிவி சேனல்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் தமிழில் சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி போன்றவை தற்போது போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

கடந்த சில வருடங்களாகவே சன் டிவியில் சீரியல்கள் அவ்வளவாக சரியில்லை என பெரும்பாலான ரசிகர்கள் ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி சீரியல்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் சன் டிவியில் சீரியல் டிஆர்பி குறைந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டது.

இதனால் மற்ற சேனல்களில் பணியாற்றும் நடிகர் நடிகைகளை அதிக சம்பளம் கொடுத்து சன் டிவி தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழ் சீரியலில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக பிரபலமானவர் நடிகை சைத்ரா ரெட்டி.

ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அழகான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சைத்ரா ரெட்டி அடுத்ததாக சன் டிவியில் உருவாகும் புதிய சீரியல் ஒன்றில் நாயகியாக களமிறங்க உள்ளார்.

இதற்கான படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என தெரிகிறது. இதில் குறிப்பாக ஜீ தமிழை விட இரண்டு மடங்கு அதிக சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

chaithra-reddy-cinemapettai
chaithra-reddy-cinemapettai

Trending News