வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கோபியின் மகனுக்காக அடுத்து நடக்கும் சக்களத்தி சண்டை.. மானங்கெட்ட சீரியலா இருக்குதே!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 50 வயதில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரே தெருவில் குடி இருக்கிறார். இந்த வாழ்க்கையாவது சந்தோசமாக இருக்கும் என பல கனவு கோட்டை கட்டிய கோபிக்கு அங்கேயும் நிம்மதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் கோபிக்கு தான் இப்படி சக்காளத்தி சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், அவருடைய மகள் எழிலினுக்கும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்கிறது. எழில், கணவனை இழந்து கைம்பெண்ணாக இருக்கும் அமிர்தாவை காதலித்து வருகிறார்.

Also Read: மீண்டும் அதே கதையை உருட்டும் இயக்குனர்.. விடாமல் சொறிஞ்சி தள்ளும் பாரதி கண்ணம்மா

இருவரும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் பழகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எழில் படம் எடுக்கும் தயாரிப்பாளரின் மகளும் அவரை ஒரு தலையாக காதலித்துக் கொண்டிருக்கிறார். முதலில் அமிர்தா எழிலை ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், பிறகு அவருடைய மாமனார் மாமியார் அனுமதிக்குப் பிறகு இருவரும் காதலிக்கின்றனர்.

இந்நிலையில் எழில் தன்னுடைய குடும்பத்தினரிடம் அமிர்தாவை காதலிப்பதை தெரியப்படுத்தி விரைவில் திருமணம் செய்து கொள்ளும் என்ற எண்ணத்தில் இருந்தனர். இதைப் பற்றி பாக்யாவிடம் பேசவும் எழில் முடிவெடுத்திருந்தார்.

Also Read: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

இந்த சூழலில் எழிலின் தயாரிப்பாளரின் மகளான ஷர்மிலி பாக்யாவின் குடும்பத்தினரையும் பார்த்து விசாரித்து அவர்களது மனதை கவர்ந்து விட்டார். அதற்கு மேலாக தற்போது அமிர்தா வீட்டிற்கும் சென்று அங்கேயும் குட்டையை கலக்கி விட்டு விட்டார்.

இப்போது எழிலுக்காக அமிர்தா மற்றும் ஷர்மிலி இருவரும் மோதிக் கொள்ளப் போகின்றனர். இப்படி பாக்கியலட்சுமி சீரியலில் ஒருத்தருக்காக இரண்டு பேர் அடித்துக் கொள்வதால் மானங்கெட்ட சீரியலாக இருக்கிறதே! என்று நெட்டிசன்கள் பாக்கியலட்சுமி சீரியலை கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Also Read: தாத்தாவான சந்தோசத்தில் கோபி வெளுத்து வாங்கிய ராதிகா.. இதுக்கு மேல அசிங்கப்பட ஒன்னும் இல்ல

Trending News