வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சந்திரமுகி அரண்மனை ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா? கேட்டா அரண்டு போயிருவீங்க

ரஜினியின் சந்திரமுகி திரைப்படம், இன்றளவும் வருடத்திற்கு ஒரு முறை தொலைக்காட்சிகளில் பண்டிகை நாட்களில் ஒளிபரப்பப்படும். குடும்பமே அமர்ந்து பார்க்கும்படியான இந்த படம், அன்றும் இன்றும் பேமஸ். குறிப்பாக படத்தில் வரும் ஒவ்வொரு வடிவேலு காமெடியும் ஒரு மீம் template தான்.

ஹாரர், த்ரில்லர் கதையை காமெடியோடு ரூ. 19 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி ரூ. 90 கோடி வரை வசூலை பெற்றது. இப்படம் 890 நாட்கள் ஓடி வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்திருந்தது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, விஜயகுமார், நாசர், மாளவிகா, கேஆர்.விஜயா, வினீத் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கும். இந்த படம் நயன்தாராவுக்கு ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் ஆக அமைந்தது. முதலில் அய்யா படத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் தான் முதலில் வெளியானது. முதல் படமே சூப்பர்ஸ்டார் ஜோடினா சும்மாவா.. நயனுக்கு அன்று அடிக்க ஆரம்பித்தது லக்.

அரண்மனை ஒரு நாள் வாடகை..

இந்த படத்தில் சந்திரமுகி என்ற நாட்டியக்காரி வசித்தாக ஒரு அரண்மனையை காட்டுவார்கள். அந்த அரண்மனைக்கு குடி பெயர்ந்த பிறகு, பல அமானுஷ்யங்கள் நடக்கும். மேலும் சந்திரமுகியின் தீரா பகையை தீர்த்துக்கொள்ள நினைக்கும்.

இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சந்திரமுகியிடம், தான் வேட்டையன் மகாராஜா என்ற நம்பவைத்து, சந்திரமுகியை விரட்டுவார். இந்த படம், பல மொழிகளில் உருவானது. மலையாளத்தில் உருவான மணிச்சித்ர தாழ், படத்தை தழுவி தான் எடுக்கப்பட்டது.

இந்த சந்திரமுகி அரண்மனை எங்க இருக்கு தெரியுமா? இந்த படத்தில் சந்திரமுகி வீடு என காட்டப்படும் அரண்மனை பெங்களூருவில் உள்ள பேலஸ் தானாம். அதில் படப்பிடிப்பு நடத்த ஒருநாள் வாடகை மட்டுமே ரூ. 1.5 லட்சம் வாடகையாம், இதுல பட அறைகளுக்கு செட் போட்டார்களாம். அந்த காலத்துலயே ஒரு நாள் வாடகை 1.5 லட்சம்.. என்றால் இப்போது எவ்வளவு இருக்கும் என்று அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் ரசிகர்கள்.

Trending News