தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவால் நல்ல வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசமான கதையை மையமாகக் கொண்டே இருக்கும். அப்படி வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி திரைப்படம்தான் சந்திரமுகி இப்படத்தில் ரஜினிகாந்தை விட சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் இருந்தது.
அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றார். அதிலும் ஜோதிகா ஆக்ரோஷமாக தெலுங்கு பேசும் வசனம், சந்திரமுகி பாடல் அனைத்திலும் ஜோதிகா நடிப்பில் பெரிதும் பாராட்டப்பட்டது.
இப்படி முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா கிடையாதாம் மலையாளத்தில் பிரபல நடிகையான நவ்யா நாயர் தான். முதலில் நவ்யா நாயர் இடம் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பேசப்பட்டது. பின்பு ஏதோ ஒரு சில காரணங்களால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என தற்போது அந்த நடிகை கூறியுள்ளார்.
மேலும் பி வாசு நவ்யா நாயர் வைத்து கன்னடத்தில் திரிஷாம் படத்தை இயக்கியதாகவும் அப்போது இதைப் பற்றி பேசியதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது ரசிகர்கள் இப்படத்தில் நவ்யா நாயர் நடித்திருந்தாலும் ஜோதிகா நடித்து இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும் என கூறி வருகின்றனர்.