வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சந்திரமுகி 2 வில் பட்டைய கிளப்பிய 3 நடிகர்கள்.. லைக்கா, வாசு என ஆச்சரியப்பட வைத்த சம்பவம்

Chandramukhi 2: பி வாசு இயக்கத்தில் ரஜினி மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் வெற்றியை கண்டிருக்கிறது. அவ்வாறு ரஜினிக்கு திருப்புமுறையாக அமைந்த படம் தான் சந்திரமுகி. தற்பொழுது சந்திரமுகி 1 விட 2ல் ஆர்ப்பரிக்கும் சம்பவம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

2005ல் ரஜினிக்கு கம் பேக்காய் அமைந்த படம் தான் சந்திரமுகி. பி வாசு இயக்கத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வினித், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ரஜினி மற்றும் வடிவேலு காம்போவில் இடம்பெற்ற நகைச்சுவை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தந்தது.

Also Read: 100 கோடியை தொட முடியாமல் திணறிய ஜெய்லர் முதல் நாள் வசூல்.. ஏரியா வாரியாக அதிகாரப்பூர்வமாக வந்த ரிப்போர்ட்

அவ்வாறு ரஜினிக்கு திருப்புமுனையை அமைந்த இப்படத்தின் பாகம் 2 தொடங்கப்பட்டு படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில் இப்படம் சென்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இப்படத்தை போட்டு பார்த்த பட குழுவினர் மிரண்டே போய்விட்டனராம்.

இப்படத்தின் தயாரிப்பான லைக்கா மற்றும் பி வாசு தற்பொழுது இப்படத்தை கொண்டாடி வருகின்றனராம். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரம் ஏற்று தன் சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டி இருக்கிறாராம்.

Also Read: வைரலாகும் இளம் வயது ஜீவானந்தம், ஈஸ்வரி காதல் புகைப்படம்.. கதறி அழும் குணசேகரன் பொண்டாட்டி

மேலும் இப்படத்தில் முக்கிய புள்ளிகளாக பார்க்கப்படும் ராகவா லாரன்ஸ், கங்கணா ரணாவாத், வடிவேலு ஆகிய 3 பேர்களும் பட்டைய கிளப்பில் இருக்கிறார்களாம். அதைத்தொடர்ந்து இவர்களின் நடிப்பு படத்தில் கூடுதல் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி நிராகரித்த இப்படத்தை ராகவா லாரன்ஸ் ஸ்கோர் செய்துள்ளதாகவும், கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய லெவலில் ஹிட் கொடுக்கும் எனவும் ஆர்ப்பரித்து வருகின்றனர் லைக்கா. இத்தகைய எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய இப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் சினிமா வட்டாரங்கள்.

Also Read: டாப் 6 ஹீரோக்களின் நூறாவது படம் வெற்றியா தோல்வியா?. ரஜினி, கமலையே தூக்கி சாப்பிட்ட கேப்டன் பிரபாகரன்

Trending News