புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஆயுத பூஜையும் இல்ல, தீபாவளியும் இல்ல.. ரிலீஸ் தேதியை லாக் செய்த சந்திரமுகி 2

Chandramukhi 2: சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்து அதிரி புதிரி வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படம் இன்று வரை பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பி வாசு இயக்கியுள்ள இந்த இரண்டாம் பாகத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், கங்கனா ரணாவத் ஆகியோர் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை பட குழு போட்டோவுடன் அறிவித்திருந்தது.

Also read: சந்திரமுகி 2 படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

இந்நிலையில் நேற்று லைக்கா நிறுவனம் சந்திரமுகி 2 குறித்த முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே இப்படம் ஆயுத பூஜை அல்லது தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் ஆயுத பூஜையை முன்னிட்டு விஜய்யின் லியோ படம் வெளியாகும் என்ற அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டும் இன்றி தீபாவளிக்கு ஜிகர்தண்டா 2, அயலான் போன்ற படங்களும் வெளியாக இருக்கிறது. இதன் காரணமாகவே சந்திரமுகி 2 விநாயகர் சதுர்த்தியை குறிவைத்து களம் இறங்க உள்ளது.

Also read: அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த ரஜினியின் 6 படங்கள்.. இத்தனை நாட்களா என வாயை பிளக்க வைத்த சந்திரமுகி

அந்த வகையில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதை இப்போது லைக்கா போஸ்டர் உடன் வெளியிட்டு இருக்கிறது. இதுவே இப்போது ஆர்வத்தை தூண்டியுள்ள நிலையில் ரசிகர்கள் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி தற்போது காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.

மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற வாழ்த்துக்களும் இப்போது குவிய ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த சந்திரமுகி 2 சோலோவாக களம் இறங்கி வசூலை வாரி குவிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

chandramuki 2-poster
chandramuki 2-poster

Trending News