சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இறைவனை விட மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்த சந்திரமுகி 2.. வேட்டையனின் வசூல் வேட்டை ஆரம்பம்

Chandramuki 2, Iraivan First Day Collection: நேற்றைய தினம் திரையரங்குகளில் சந்திரமுகி 2, இறைவன் மற்றும் சித்தா படங்கள் வெளியாகி இருந்தது. எப்போதுமே வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நிலையில் நேற்று மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானது. அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியாகிய சட்டை போடு போட்ட சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் நடித்திருந்தார்.

வாசு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் சந்திரமுகி முதல் பாகம் அளவுக்கு ரசிகர்களின் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் குடும்பமாக பார்க்கும் சிறந்த என்டர்டைன்மென்ட் படமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

Also Read : இந்த வாரத்துல சந்திரமுகி 2, இறைவனை தும்சம் செய்த படம்.. கமலின் மகாநதி படத்தைக் கொண்டு உருவாக்கிய இயக்குனர்

இதைத்தொடர்ந்து அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் இறைவன் படம் வெளியாகி இருந்தது. சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள இறைவன் அடல்ட் படமாக வெளியானது. இதனால் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இறைவன் படத்தை பார்க்க கூடாது என்பதால் வசூலில் பெருத்த அடி வாங்கி இருக்கிறது.

மேலும் சந்திரமுகி 2 படம் குடும்பமாக சென்று பார்க்கக்கூடிய படம் என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் இறைவனை விட மூன்று மடங்கு அதிகமாக வசூல் செய்திருக்கிறது. அந்த வகையில் முதல் நாளில் சந்திரமுகி 2 படம் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7.5 கோடி வசூல் செய்து இருக்கிறது.

Also Read : துக்கம் தொண்டையை அடைக்க வைத்த சந்திரமுகி 2.. வேட்டையன் ரஜினி சேர்த்து வச்ச பெயரை கெடுத்துட்டாங்க!

மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 4.5 கோடி வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் சந்திரமுகி வேட்டையனின் வசூல் வேட்டை தொடங்கி இருக்கிறது. ஜெயம் ரவியின் இறைவன் படம் பொருத்தவரையில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட முதல் நாளில் 2.5 கோடி வசூல் செய்திருக்கிறது. ஜெயம் ரவி இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்த நிலையில் முதல் நாளே வசூல் சற்று குறைந்து இருக்கிறது.

மேலும் அடுத்த அடுத்த விடுமுறை நாட்கள் என்பதால் இந்த இரு படங்களின் வசூலும் சற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. சந்திரமுகி 2 மற்றும் இறைவன் படங்களை காட்டிலும் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் சித்தா படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : கோவில் கோவிலா சுத்திய சந்திரமுகி, வேட்டையன் தேறுமா, தேறாத.? சாவு பயத்தை காட்டிய முழு விமர்சனம்

Trending News