வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சீரியல் டிஆர்பிக்காக இப்படி கேவலமா பண்றாங்க.. சேனல்களை ஒதுக்கி வேறு பாதைக்கு செல்லும் குடும்பப் பெண்கள்

Serial Worst Story: என்னதான் வெள்ளித்திரையில் பல நடிகர்களின் வித்தியாசமான படங்கள் வந்தாலும், அனைத்து குடும்பங்களும் தினமும் பார்த்து கொண்டாடி வருவது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தான். அந்த வகையில் ஒரு காலத்தில் சீரியல்கள் என்றால் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் ஒன்று சேர்ந்து பார்க்கும் விதமாக அமைந்தது. அதற்கு காரணம் அவர்களுடைய பொழுதுபோக்கை சரியாக பயன்படுத்தி அதற்கு ஏற்ற மாதிரி கதையை கொண்டு வந்ததால்.

ஆனால் இந்த காலத்தில் வருகிற சீரியல்கள் எல்லாம் தலையில் அடித்துக் கொண்டு பார்க்கும் படியாக தான் இருக்கிறது. அதுவும் சில சீரியல்களை பார்த்தாலே பிபி, பிரஷர் ஏறிவிடும். அந்த அளவிற்கு கொடூரமாக இருக்கிறது. முக்கியமாக அடுத்தவன் புருஷனுக்கு ஆசைப்படுவதும், அடுத்தவருடைய சொத்தை அபகரிப்பதும் தான் முக்கிய பங்காக இருக்கிறது.

அதுவும் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை கொடுத்து எந்த அளவிற்கு சீரியலை நாசமாக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடூரமாக காட்டப்படுகிறார்கள். உதாரணத்திற்கு சன் டிவியில் மதியம் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி என்ற சீரியலில் ஹீரோவுக்கு வேற கல்யாணம் ஆகிவிட்டது. ஆனாலும் அவருடைய சந்தோசத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் ஒரு பெண்ணாகவே இருந்து கொடுமைப்படுத்தும் விதம் பார்ப்பதற்கே நெஞ்ச உருக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.

Also read: அப்பத்தாவின் முன் முதலைக்கண்ணீர் வடிக்கும் குணசேகரன்.. வாடி வாசலை தாண்டி சீரும் காளையாக மாறிய மருமகள்கள்

சீரியலா இருந்தாலும் கொஞ்சமாவது ஒரு லாஜிக் இருக்க வேண்டும். அடுத்து விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தவன் புருஷன் மீது ஆசைப்பட்டு அவனுடைய வாழ்க்கையில் நுழைந்து சந்தோஷத்தை சின்னா பின்னமாக கெடுப்பது. அத்துடன் ரெண்டு புருஷன், ரெண்டு பொண்டாட்டி மட்டுமே கதையை வைத்து உருட்டுகிறார்கள்.

இதற்கு அடுத்து எதிர்நீச்சல் சீரியலில் சொத்துக்காகவும், கௌரவத்திற்காகவும் வன்மத்தை மட்டுமே கொட்டும் குணசேகரனின் கொடூர வில்லத்தனத்தை பார்க்கவே சகிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் சன் டிவி சேனலுக்கு ஒரு டிரேட் மார்க் இருந்தது. அதைக் கெடுக்கும் விதமாக கேவலமான கதையை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக மட்டமான கதையை கொண்டு வருகிறார்கள்.

இதனால் வேறு வழி இல்லாமல் நடிக்கும் குடும்பப் பெண்கள் இயக்குனர் சொல்வதைக் கேட்டு கேரக்டர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படியே போனால் சமூக சீர்குலைவதற்கு இதுவே ஒரு முன் உதாரணமாக அமைந்து விடும். தயவு செய்து இது போன்ற கதையை தவிர்த்து விட்டு ஒரு பொழுதுபோக்கு விஷயமாக நினைத்து சீரியலை கொண்டு வாருங்கள் என்று மக்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Also read: பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக நிற்கும் சக்காளத்தி.. கோபியின் மகன்களின் வாழ்க்கையை சரி செய்யப் போகும் ராதிகா

Trending News