சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அசராமல் இறங்கி ஆடும் குணசேகரன்.. கொட்டத்தை அடக்க வரும் சாருபாலா

Ethirneechal Serial: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி காணாமல் போன விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. பெண்ணை கடத்தியதாக வந்த புகாரை அடுத்து எதிர்நீச்சல் மருமகள்கள் தற்போது காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருக்கின்றனர்.

அதில் விசாரணை என்ற பெயரில் அவர்கள் கொடுமைப்படுத்தப்படும் காட்சி நேற்றைய எபிசோடில் காட்டப்பட்டது. அதிலும் நந்தினி, கதிர் இருவரின் நடிப்பும் கண்கலங்க வைத்தது. எப்படியாவது அவர்களை ஜாமினில் அழைத்து வர தற்போது கதிர், ஞானம், சக்தி, தர்ஷன் ஆகியோர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

அதில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ இன்றைய எபிசோடுக்கான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் கதிர் சாருபாலாவை சந்தித்து உங்கள் வீட்டில் நடந்த குழப்பம் அனைத்திற்கும் நான் தான் காரணம் என்ற உண்மையை கூறுகிறார்.

Also read: போலீஸ் ஸ்டேஷனில் நந்தினிக்கு நேர்ந்த கொடுமை.. ட்ராக் மாறி போகும் எதிர்நீச்சல்

அதைத்தொடர்ந்து குணசேகரனால் நடக்கும் பிரச்சனைகளையும் கூறுகிறார். மறுபக்கம் ஜெயிலில் இருக்கும் மருமகள்கள் தங்களின் நிலையை நினைத்து நொந்து போய் இருக்கின்றனர். இன்னொரு பக்கம் குணசேகரன் தன்னுடைய ஆட்டத்தை இறங்கி ஆடுகிறார்.

நாளைக்கு நீங்க வீட்டுக்கு வரும்போது ஒரு பெரிய விஷயத்தை சொல்லப் போறேன் என்று பொடி வைத்த பேசுகிறார். இப்படியாக வெளிவந்திருக்கும் இந்த ப்ரோமோவை பார்க்கும் போது நிச்சயம் சாருபாலா ஆதி குணசேகரன் இருவரின் மோதலும் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

பெத்த மகளை வைத்து கேம் ஆடும் குணசேகரன் இந்த ஆட்டத்தில் நிச்சயம் மண்ணை கவ்வ தான் போகிறார். அடுத்தடுத்த எபிசோடுகள் பார்ப்பவர்களுக்கு கடுப்பாக இருந்தாலும் நிச்சயம் இயக்குனர் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்திருப்பார் என்று ஆவலும் ஒரு பக்கம் ஏற்பட்டுள்ளது.

Also read: முத்துவின் சட்டையை பிடித்த மச்சான்.. நண்பனுக்காக கையை முறித்த சம்பவம்

Trending News