வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

OYO-வில் ரூம் போடுவதற்கு முன்பு இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..

காதலியை அழைத்து கொண்டு அடிக்கடி oyo செல்பவரா நீங்கள்.. முதலில் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய கால சூழ்நிலையில், இளைஞர்கள் ரொம்ப fast ஆக இருக்கின்றனர். அது நல்ல விஷயத்தில் இருந்தால் பரவா இல்லை. இளைஞர்களின் பல்ஸை புரிந்துகொண்டு இதையும் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்.

பெரியவர்கள் ‘கலி முத்திருத்து’ என்று தலையில் அடித்து கொண்டாலும், ‘போயா பூமர்ரு’ என்று கலாய்த்து விட்டு செல்கினறனர் நம் 2கே கிட்ஸ். அதுவும் சென்னை பெங்களூர் போன்ற இடங்களில் oyo ரொம்ப சாதாரணமாக மாறிவிட்டது.

ஓயோ அறைகள் இப்போது இந்தியாவில் இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது OYO அறைகள் குறைந்த வாடகை விகிதத்தில் வழங்கப்படுவதாலும், பாதுகாப்பானது என்ற நம்பிக்கை வருவதாலும், மக்கள் அதிக அளவில் OYO அறைகளை பயன்படுத்துகிறார்கள்.

முதலில் இதையெல்லாம் செக் பண்ணுங்க

OYO நிறுவனத்தில் இருக்கும் ஓட்டல்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. என்னதான் OYO அறைகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என கூறிவந்தாலும், உள்ளுக்குள் பயம் இருக்க தானே செய்யும். நாம் safe தானா என்று சரிபார்க்க பல வழிகள் உள்ளது.

போலீஸ் பயம்: போலீஸ் வந்துவிடுவார்களோ என்ற பயம் கண்டிப்பாக எல்லாருக்கும் இருக்கும். OYO-வில் நீங்கள் பதிவு செய்த ஹோட்டல்களில் போலீசார் எந்த வித வாரண்ட்களும் இல்லாமல் வந்து சோதனை செய்ய முடியாது. அது மனித உரிமை மீறல்கள் ஆவும். மேலும் உங்களுக்கு 18 வயதுக்கு மேல் ஆகி இருந்தால், உங்களை கைதும் செய்ய முடியாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேமரா பயம்: கேமரா இருக்குமோ என்ற அச்சம் இருக்கும். அதை தெரிந்துகொள்ள, அந்த அறையில் இருக்கும் மொத்த லைட்களையும் ஆஃப் செய்துவிட்டு, உங்கள் மொபைல் போன் கேமரா வைத்து அனைத்து இடங்களையும் பாருங்கள்.அப்படி பார்க்கும்போது, எங்காவது சிவப்பு நிறத்தில் ஒளி வந்தால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ளலாம்.

யாரவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம்: கண்ணாடிகளில் கையை வைத்து பாருங்கள். அந்த கண்ணாடியில் உங்களின் இரு விரல்களும் தொட்டால் அந்த கண்ணாடி வழியாக மறுப்க்கம் இருப்பவர்களும் உங்களை பார்க்கலாம் என்று அர்த்தம். அதுவே உங்களின் இரு விரல்களுக்கும் இடையில் சற்று தூரம் இருந்தால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

Trending News