நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது போட்டியில் டெல்லி அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டிய டெல்லி அணி அசால்டாக வெற்றி பெற்று முதல் போட்டியிலேயே தனது வெற்றிக் கணக்கை தொடங்கியது.
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் கூட செல்ல முடியாமல் தோல்வி அடைந்து வெளியேறியது. அந்த சீசனில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாமல் போனதே.
இந்த முறை பேட்டிங் ஆர்டரில் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்றபடி சிஎஸ்கே ஆட்களை ஏலம் எடுத்தது. ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியை பார்க்கையில் பேட்ஸ்மேன்களை வலுப்படுத்தி பவுலிங் யூனிட்டில் சொதப்பியது முக்கிய காரணமாக தெரிகிறது.
நேற்று வேகப்பந்து வீச்சில் முழுமையாக சொதப்பியது சென்னை அணி. தீபக் சஹர் சித்ரத்துல் தாக்கூர். சாம் கரன் போன்றவர்களை வைத்து ஆடியது. அவர்கள் மூவரும் கிட்டத்தட்ட ஓரளவு பேட்டிங் செய்யும் பவுலர்கள். அவர்கள் மீடியமாக பௌலிங் செய்யக்கூடியவர்கள். அதனால் எதிரணி அவர்களை எளிதாக சமாளித்து அதிரடி ஆட்டம் ஆடியது.

இதனால் 19ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்காகிய 188 ரன்களை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது டெல்லி அணி. மொத்தமாக சென்னை அணி பவுலிங்கில் கோட்டை விட்டதே முக்கிய காரணமாக அமைந்தது.