ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
போன சீசனில் வெற்றியுடன் தனது கணக்கை துவக்கிய சென்னை அணி நடப்பு சீசனில் முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவியது.
நேற்று நடைபெற்ற போட்டியில் துவக்கத்திலிருந்தே ஷிகர் தவானும், பிரித்தி ஷாவும் அதிரடி காட்டி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். சென்னை அணி பிரித்வி ஷாவின் கேட்ச்கள் உள்ளிட்டவற்றை தவற விட்டு போட்டியை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சாதகமாக்கியது.
போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் தோனி, பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் மும்பை மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் அடித்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அதை செய்ய தவறி விட்டோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், தோல்வி மட்டுமின்றி மற்றொரு சிக்கலையும் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே எதிர்கொண்டுள்ளது. நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மெதுவாக பந்து வீசியதாக கேப்டன் தோனிக்கு 12 லட்சம் ரூபாயை ஐபிஎல் நிர்வாகம் அபராதமாக விதித்துள்ளது.
இதை ஐபிஎல் நிர்வாகம் தனது வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி செய்த முதல் தவறு இது எனவும் குறிப்பிட்டிருந்தது.