செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

லேடிஸ் கம்பாட்மண்டில் ஏறி சு**இ**பம் செய்த இளைஞன்.. வீடியோவுடன் வெளுத்து வாங்கிய பெண்

இந்திய நாட்டில் பெண் விடுதலை, பெண்களுக்கான சம உரிமை என்று பேசிக்கொண்டிருக்கும் போது பெண்களுக்கான பாதுகாப்பு என்று ஒன்று இருந்ததே அது எங்கே காணாமல் போனது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. தொடரும் பாலியல் வன்முறைகள், பாலியல் சீண்டல்கள் என தொடர்ந்து இது போன்று நடந்து கொண்டேதான் இருக்கிறது. சட்டங்கள் எவ்வளவுதான் கடுமையாக்கப்பட்டாலும், காவல்துறை தனது பிடியை இறுக்கிப் பிடித்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறைந்த பாடில்லை.

அப்படி நம்மை அதிர வைக்கும் ஒரு சம்பவம் தான் நமது சென்னை மாநகரத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் ஒரு பொது இடத்தில் அரங்கேறி இருக்கிறது. இரவு சென்னை மின்சார ரயிலில், இரவு 10 மணியளவில் தனியாக பணி முடித்து விட்டு வீட்டுக்குச் சென்ற ஒரு பெண்ணிடம் ஒருவன் செய்த கேவலமான செயல்தான் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இயங்கி வரும் தனியார் யூடியூப் சமூக வலைதள ஊடகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் இரவு தன்னுடைய பணி முடிந்து சென்னை மின்சார ரயிலில் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அவர் தனியாகச் செல்வதை நோட்டமிட்ட ஒருவன், பின் தொடர்ந்து அவர் இருப்பது பெண்களுக்கான கம்பாட்மண்ட் என்று தெரிந்தே உள்ளே ஏறி அமர்ந்து இருக்கிறான். பின் அந்த பெண் முன்பு எழுந்து நின்று அருவருக்கும் வகையில், சு** இ**பம் செய்து அந்த பெண் பார்க்கும் படி செய்து இருக்கிறான்.

இதனை கண்டு அதிர்ந்து போன அந்தப்பெண் அதை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். உஷாரான அவன் உடனே எழுந்து சென்று ரயில் நின்றவுடன் குதித்து தப்பி ஓடி விட்டான். அந்தப்பெண் துணிச்சலாக அவனை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். அப்படி கேட்கவில்லை என்றால் அந்த இடத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். ரயிலில் இரவில் தனியாக வரும் பெண்களின் நிலை இதுதானா..?

காவல்துறையும் ரயில்வேத்துறையும் இதற்க்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது. ஊடகத்தில் பணிபுரியும் இந்த பெண்ணிற்க்கே இந்த நிலை என்றால், சாதாரணப் பெண்கள் இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டால் நிலைமை என்னவாகும். அடக்க நினைத்த ஆணை துணிந்து நின்று அந்த பெண் கேட்ட கேள்வியில் பொட்டிப்பாம்பாய் பதுங்கி இறங்கி ஓடி விட்டான் அவன்.

மேலும் அந்தப்பெண் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நெற்றியில் அடித்தார் போல ஒட்டு மொத்த சமூகத்தின் மீது பாதிக்கப்படும் பெண்களின் பிரதியாக கேள்விகளை தொடுத்து இருக்கிறார். இதற்க்கு இந்த சமூகமும், இந்த அரசும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது, பெண்களின் பாதுகாப்பு இனிமேலாவது உறுதி செய்யப்படுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். அந்தப் பெண் அவனை திட்டுவதும் அதற்கு அவன் இறங்கி ஓடுவதும் என பதியபப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவி வருகிறது.

Trending News